Mushroom and Weight Loss : காளான் சமையல் பிடிக்குமா? இப்படி சாப்பிட்டா உடல் எடை குறையுமா?
காளான்களில் சில வகைகளை மட்டுமே நம்மால் உண்ண முடியும். அதில் பல ஆரோக்ய நன்மைகள் இருக்கும் பட்சத்தில், உடல் எடையைக் குறைக்கும் உணவாகவும் அது இருக்கும் என சொல்கிறார்கள் நிபுணர்கள்.
காளான் உடல் எடையைக் குறைக்க உதவுமா? என்ற கேள்வியே அனைவரையும் குழப்புகிறது அல்லவா? சில உணவுகள் கலோரிகளை எரிக்கவும், உடலில் தங்கிய கொழுப்பை அகற்றவும் உதவும் என்பது நமக்கு தெரியும். ஆனால், எடை குறைப்புக்கு உண்மையிலேயே உதவ முடியுமா நாமே ஆச்சர்யப்படும் சில உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் காளான்.
காளான்
காளான்கள் அடிப்படையில் தாவர அடிப்படையிலான பூஞ்சைகள் என்று கூறப்படும். அவற்றுள் சில வகைகளை மட்டுமே நம்மால் உண்ண முடியும். அதில் பல ஆரோக்ய நன்மைகள் இருக்கும்பட்சத்தில், உடல் எடையைக் குறைக்கும் உணவாகவும் அது இருக்கும். அதுபோக காளான்கள் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. ஸ்நாக்ஸ் முதல் உணவு வரை, காளான்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.
நார்ச்சத்து நிறைந்த உணவு
காளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வயிற்றை நீண்ட நேரத்திற்கு திருப்திகரமாக வைத்திருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட விடாமல் நம்மை பாதுகாக்கும்.
குறைந்த கலோரிகள்
காளான்கள் கலோரிகளில் குறைவாக உள்ளன என்பதால், இது எடை இழப்பு உணவில் சேர்க்க சிறந்த உணவுகளில் ஒன்றாக மாறுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
காளான்களில் புரோபயாடிக் பண்புகளும் உள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குடல் நன்றாக செயல்பட்டால், செரிமானம் நன்றாக இருக்கும். செரிமானம் சீராக இருந்தால் தேவையற்ற விஷயங்கள் வயிற்றில் சேர்வது குறித்து, எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
ஆண்டி ஆக்ஸிடென்ட்கள்
இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் காரணமாக, இது ஆண்டி ஆக்ஸிடென்ட் அழுத்தத்துக்கு எதிராக போராட உதவுகிறது. மேலும் இது உடலில் ஏற்படும் அழற்சியின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
காளானில் தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகின்றன. இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் இது குறைக்கிறது.
வைட்டமின் D
வைட்டமின் D குறைபாடு மக்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. வைட்டமின் டியைப் பெற சூரியன்தான் சிறந்த விஷயம் என்பார்கள். ஆனால் காளான்கள் போன்ற உணவுகளும் உடலில் வைட்டமின் டி அளவை மேம்படுத்த சிறந்த விஷயங்கள் ஆகும்.
ஒரு சில ஆய்வுகளின்படி காளான்கள் இதயம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது என்று கூறப்படுகிறது. மேலும் நரம்பு மண்டலங்களையும் சீராக நிர்வகிக்க உதவும் என்று கூறப்படுகிறது. காளான்கள் வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் பெரும் பங்களிப்பதாக கூறப்படுகிறது. மேலும் உணவில் காளான் சேர்த்துக்கொள்வது, அதிக கலோரி நுகர்வுக்கு வழிவகுக்காமல் தடுக்கும் என்றும், சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுக்கு பங்களிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.