Watch video: உசிலம்பட்டி மருமகளான இங்கிலாந்து பெண்.! கடல் கடந்த காதலுக்கு குவியும் வாழ்த்து!!
உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இங்கிலாந்து சாரா எலிசபெத் என்ற இளம்பெண் - வரவேற்பு நிகழ்வில் மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச் சூழலை பாதுகாக்க மணமக்கள் கேட்டுக்கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம்டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இங்கிலாந்தில் பிசியோதரபிஸ்ட் - ஆக பணியாற்றி வருகிறார்., இந்நிலையில் இங்கிலாந்து ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்ற ஆக்குபேஸன்ட் தரபிஸ்ட் -யை கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
#Abpnadu | மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இங்கிலாந்து சாரா எலிசபெத் என்ற இளம்பெண் - வரவேற்பு நிகழ்வில் மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச் சூழலை பாதுகாக்க மணமக்கள் கோரிக்கை விடுத்தனர்.@SRajaJourno | @kathiravan_vk | @guna_2403 | @Meee1025 | @NivashDa | #madurai pic.twitter.com/wLk2YQGlt3
— Arunchinna (@iamarunchinna) March 20, 2022
தற்போது நாடு திரும்பியுள்ள இந்த இளம் ஜோடிக்கு நேற்று உசிலம்பட்டியில் உள்ள ஏஜி சர்ச் -ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது., இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி மணமக்கள் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை நட வலியுறுத்தினர்.,
#Abpnadu | மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இங்கிலாந்து சாரா எலிசபெத் என்ற இளம்பெண் - வரவேற்பு நிகழ்வில் மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச் சூழலை பாதுகாக்க மணமக்கள் கோரிக்கை விடுத்தனர்.@Rameshtamil10 @kthirumani | @sa5man191011 @dpanjana | @keetharealest madurai pic.twitter.com/CNmtSKaQz9
— Arunchinna (@iamarunchinna) March 20, 2022
தொடர்ந்து கணவரின் உறவினர்கள் மற்றும் இங்கு உள்ள மக்கள் அன்பு செலுத்துவது மிகவும் பிடித்து போனதாகவும், கிராமப்புற பகுதி மிகவும் அழகானதாக உள்ளதாகவும், இங்குள்ள கலாச்சாரம், உடைகள் மற்றும் உணவு முறைகளான அரிசி சாதம், சப்பாதி, சிக்கன் பிரியாணி என இந்திய உணவு வகைகள் அனைத்தும் அருமை என சாரா எலிசபெத் தெரிவித்தார்.
இது குறித்து மணமகன் உறவினர்கள் கூறுகையில்..,” உசிலம்பட்டி பையனுக்கும், இங்கிலாந்து பையனுக்கும் கல்யாணம் என திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டோம். எங்கள் வீட்டு மகளாக தான் எலிசபெத்தை பார்க்கிறோம். நம்ம ஊர் கலாச்சாரம் ரெம்பவும் பிடிச்சிருக்கதா சொன்னார். கல்யாணத்துக்கு வந்தவங்க மணமக்களை பார்த்து வியந்தனர்” என்றனர் மகிழ்ச்சியாக.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட் - தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து