Side Effects OF AC: ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
Side Effects OF AC: ஏசி எனப்படும் குளிரூட்டி சூழலில் நீண்ட நேரம் செலவிடுவது, பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Side Effects OF AC: ஏசி எனப்படும் குளிர்சாதன சூழலில் நீண்ட நேரம் செலவிடுவதால், ஏற்படும் முக்கிய பாதிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஏசி பயன்பாட்டால் வரும் பக்க விளைவுகள்:
ஏசி என்ப்படும் குளிரூட்டியை பயன்படுத்துவது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அலுவலகத்தில் மட்டுமின்றி, வீட்டிலும் ஏசி என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. ஏசி வெயிலில் இருந்து மட்டுமல்ல, ஈரப்பதத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. ஆனால், செயற்கையாகக் கட்டுப்படுத்தப்படும் சூழலால், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்னைகளைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஏசியில் இருப்பதனால் சரும வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு, மன சோர்வு, தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏசி சூழலில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல்:
காற்றுச்சீரமைப்பினைப் பழக்கப்படுத்துவதால் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி இழக்கப்படுகிறது. வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக நோய் எதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் ஆன்டிபாடிகள் இருக்க வேண்டிய அளவுக்கு பயனுள்ளதாக இல்லை. அதனால் எளிதில் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
2. சுவாச பிரச்னைகள்:
ஏசி மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை வழங்குகிறது. இந்த காற்றில் தூசி, அழுக்கு உள்ளிட்ட ஒவ்வாமைகள் உள்ளன. ஏசி காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது ஒவ்வாமை உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே சுவாச பிரச்சனைகள் இருந்தால், அது மோசமாகிவிடும். ஏசி காற்றினால் தொண்டை வறட்சி மற்றும் சுவாச கோளாறு ஏற்படுகிறது.
3. மன சோர்வு, தலைவலி:
ஏசி அறைகளில் அதிக நேரம் செலவிடுவதால் மன சோர்வு ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மூளை சோர்வடைகிறது. மெதுவாக தலைவலியும் ஏற்படலாம். புதிய காற்று சுழற்சி இல்லாததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் மூளையும் உடலும் மந்தமாக இருக்கும். வல்லுநர்கள் ஏசியை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். குளிரூட்டி குளிர்ச்சியை தந்தாலும் நன்மையை விட தீமையே அதிகம் என்று கூறப்படுகிறது. அவசியம் இல்லாவிட்டால் ஏசியில் இருந்து விலகி இருப்பது நல்லது.
4. வறண்ட சருமம், நீரிழப்பு:
ஏசிகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும். இதனால் சருமம் எளிதில் வறண்டு போகும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறையும். அறையில் வறட்சி ஏற்படுவதால், தோல் அதன் இயற்கையான தன்மையை இழந்து அரிப்பு ஏற்படுகிறது. அரிப்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது. உடலும் நீர்ச்சத்து குறைந்து எளிதில் சோர்வடையும்.
5. தசை விறைப்பு, மூட்டு வலி:
வெளிப்புற மற்றும் உட்புற வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தசை மற்றும் மூட்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் ஏசியில் இருப்பது தசை வலி மற்றும் மூட்டு வலியை உண்டாக்கும். குறிப்பாக மூட்டுவலி உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை தொந்தரவாக இருக்கும்.
(மேற்குறிப்பிட்ட எச்சரிக்கைகள் அனைத்துமே பல்வேறு சூழலில் வல்லுநர்கள் கூறிய கருத்துகளை தொகுத்து வழங்கப்பட்டவை மட்டுமே ஆகும்)
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )