மேலும் அறிய
விருதுநகரில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்.. 10,000+ காலிப் பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.

வேலை வாய்ப்பு முகாம்
தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 11.10.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் MRF, V.V.V & SONS EDIBLE OIL, ROYAL ENFIELD ACADEMY, APOLLO PHARMACIES, MEENAKSHI MISSION HOSPITAL, LAKSHMI MILLS WORK COIMBATORE, SENTERSOFT TECHNOLOGIES, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.
விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.
விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.
முழு விவரம்
இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/ FBjDgJFUQc4ChtNc9 ஐ பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















