மேலும் அறிய

8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8-வது, 10-வது தேர்ச்சி பெற்ற 16 மாவட்ட இளைஞர்கள் ஏப்ரல் 1, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: இந்தியத் திருநாட்டின் எல்லையைக் காக்கும் உன்னதப் பணியான இந்திய இராணுவத்தில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கான நற்செய்தி வெளியாகியுள்ளது. 2027-ஆம் ஆண்டிற்கான இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் குறித்த முக்கிய அறிவிப்பினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ளார்.

பணிப்பிரிவுகள் மற்றும் தகுதிகள்

இந்திய இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான கல்வித் தகுதிகள் மற்றும் பணிப்பிரிவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* ஜெனரல் டியூட்டி (General Duty - GD): பொதுப்பணிப் பிரிவு.

* டெக்னிக்கல் டியூட்டி (Technical Duty): தொழில்நுட்பப் பிரிவு.

* கிளார்க் / ஸ்டோர் கீப்பர் (Clerk / Store Keeper Technical): எழுத்தர் மற்றும் களஞ்சியக் காப்பாளர் பிரிவு.

* டிரேட்ஸ்மேன் (Tradesman - 10th Pass): 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிரிவு.

* டிரேட்ஸ்மேன் (Tradesman - 8th Pass): 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிரிவு.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 17 ½ முதல் 22 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இராணுவ விதிகளின்படி குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

திருச்சிராப்பள்ளி மண்டல ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் வரும் பின்வரும் 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.

1.திருச்சிராப்பள்ளி

2. கரூர் 

3. பெரம்பலூர் 

4. அரியலூர் 

5. தஞ்சாவூர் 

6. புதுக்கோட்டை 

7. திருவாரூர் 

8. நாகப்பட்டினம் 

9. சிவகங்கை

10. ராமநாதபுரம் 

11. விருதுநகர் 

12. திருநெல்வேலி 

13. தென்காசி 

14. தூத்துக்குடி 

15. கன்னியாகுமரி மற்றும் 

16. மயிலாடுதுறை

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் கட்டாயம் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.

* இணையதள முகவரி: www.joinindianarmy.nic.in

* விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.04.2026

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பிறகு தகுதியானவர்களுக்கு ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) மற்றும் உடல் தகுதித் தேர்வுகள் குறித்த விவரங்கள் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

ஆட்சியரின் வேண்டுகோள்

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

"இந்திய இராணுவத்தில் பணியாற்றுவது என்பது வெறும் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, அது தாய்நாட்டிற்குச் செய்யும் ஒரு பெருமைமிக்க சேவையாகும். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியும், ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இராணுவத் தேர்வு என்பது முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறக்கூடியது. எனவே, முறையான பயிற்சியினை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைந்து பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முக்கிய குறிப்புகள்

  • விண்ணப்பதாரர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினைத் துல்லியமாக வழங்க வேண்டும்.
  • உடல் தகுதித் தேர்வின் போது உயரம், மார்பளவு மற்றும் ஓட்டப்பந்தயம் போன்ற சோதனைகள் நடைபெறும் என்பதால் இப்போதிலிருந்தே பயிற்சியைத் தொடங்குவது அவசியம்.
  • கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தேசப்பற்று மிக்க தமிழக இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தில் இணைந்து சாதனைகள் புரிய மாவட்ட நிர்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Chennai Super 6 : சென்னை சூப்பர் 6.! அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்- என்ன என்ன தெரியுமா.?
சென்னை சூப்பர் 6.! அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்- என்ன என்ன தெரியுமா.?
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!
TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Chennai Super 6 : சென்னை சூப்பர் 6.! அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்- என்ன என்ன தெரியுமா.?
சென்னை சூப்பர் 6.! அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்- என்ன என்ன தெரியுமா.?
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!
TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!
ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
Edappadi TVK candidate : எடப்பாடியை வீழ்த்த செம பிளான் போட்ட விஜய்.! வெளியான முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா.?
எடப்பாடியை வீழ்த்த செம பிளான் போட்ட விஜய்.! வெளியான முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா.?
6 லட்சம் பட்ஜெட்டில் அசத்தலான காம்பேக்ட் எஸ்யூவி! வரப்போது Renault Bridger -எப்போது?
6 லட்சம் பட்ஜெட்டில் அசத்தலான காம்பேக்ட் எஸ்யூவி! வரப்போது Renault Bridger -எப்போது?
MK Stalin election campaign : செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரல.. Duty போட்டதே நான் தான்- இபிஎஸ்யை அலற விடும் ஸ்டாலின்
செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரல.. Duty போட்டதே நான் தான்- இபிஎஸ்யை அலற விடும் ஸ்டாலின்
Embed widget