Job Alert: மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்! ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை- விவரம்!
Job Alert: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம்.
தமிழ்நாடு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய வழக்கு அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் மாவட்ட சமூகநல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு மையம்:
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
வழக்கு அலுவலர் (Case worker)
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
கல்வித் தகுதி:
வழக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க சமூகப் பணியில், உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
ஆலோசகர் பணியில் ஓராண்டுகாலம் அனுபவம் உள்ளவர்களும் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உள்ளூரைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பன்முக உதவியாளர் பணிக்கு ஏதாவது அலுவலகத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
தமிழ் மொழியில் நன்கு பேச தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
வழக்கு அலுவலர் (Case worker) - ரூ.15,000/-
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)- ரூ.6,400/-
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 22 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேலே குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவகலத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
இந்தப் பணி முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது என்றும், பணி நிரந்தரம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் தொடர்பு எண் மற்றும் முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் பழைய கட்டிடம் முதல் தளம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம்.
காஞ்சிபுரம் -631 501
விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய : https://kancheepuram.nic.in/notice/application-are-invited-for-various-post-on-contract-basis-social-welfare-and-women-empowerment-department-in-kanchipuram-district/
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.01.2024 மாலை 5.45க்குள்
மொத்தம் எத்தனை காலி பணியிடங்கள், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்டவற்றை அறிவிப்பின் விவரத்தினை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2023/12/20231221100.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி,6-ம் (2024) தேதி கடைசி தேதி. மேலும் வாசிக்க...