Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் 51வது நாளாக கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால 2775 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 47 பேர் மரணமடைந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாதவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 51வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
2775 பேருக்கு கொரோனா பாதிப்பு, 47 பேர் மரணம் : தமிழ்நாடு கொரோனா நிலவரம்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால 2775 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 47 பேர் மரணமடைந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாதவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 51வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
சென்னையில் தடுப்பூசி முன்பதிவுக்கு இணையதளம் அறிமுகம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. http://gccvaccine.in என்ற இணையதளத்தில் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா பரவல் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம்
பொதுஇடங்களில் மக்களின் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டதாக மக்கள் எண்ணக் கூடாது. தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனா 3ஆம் அலை வராமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடைகளும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆகஸ்ட் 15க்குள் புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் மக்களுக்கு தயக்கம் இருந்தது தற்போது அதில் இருந்து வெளியே வந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
இங்கிலாந்து நாட்டில் கோவிட் -19 பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள்
இங்கிலாந்து நாட்டில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையை விட பாதிப்பு மோசமாகி வருகிறது.