10 Years Of Yeh Jawaani Hai Deewaani: பிரமிக்க வைத்த ரன்பீர் கபூர் கேரக்டர்.. 10 ஆண்டுகளை கடந்த ஏ ஜவானி ஹே தீவானி..!
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஏ ஜவானி ஹே தீவானி.ரன்பீர் கபூர், தீபிகா படூகோன், ஆதித்யா ராவ், கல்கி கோச்லின் ஆகியவர்கள் நடித்து அயான் முகர்ஜீ இந்தப் படத்தை இயக்கியிருந்தார்
பாலிவுட்டில் ராம் காம் எனப்படும் ரொமான்டிக் காமெடி படங்கள் வருவது ஒன்றும் புதிதில்லை. அதிலும் ரன்பீர் கபூரின் வருகைக்குப் பின் பெரும்பாலான படங்களில் ஒரே மாதிரியான டெம்பிளேட் கதையைத்தான் எடுத்து வந்தார்கள். எந்த கவலையும் இல்லாமல் சுற்றும் வாலிபன், அவனது பயணத்தில் சந்திக்கும் பெண் இவர்களுக்கு இடையில் நடக்கும் ஒரு காதல் கதை.ஆனால் ஏ ஜவானி ஹே தீவானி இந்த வரிசையில் இருந்து வெளிவந்து சற்று உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இந்த காரணத்தினால் தான் மற்ற படங்களில் இருந்து அது தனித்தும் நிற்கிறது.
மற்ற படங்களில் வருவதுபோல் அதே கவலையே இல்லாமல் சுற்றும் ஒரு கதாபாத்திரமாகத்தான் ரன்பீர் கபூரின் கபீர் கேரக்டரும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வழக்கமான ஹீரோ இமேஜ் இல்லாமல் இந்தப் படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு நேர்மை சேர்க்கும் அழுத்தமான காரணங்கள் பின்னணியில் அமைந்திருந்தது. மேலும் ரன்பீர் நடித்த விடலைத்தனமாக கதாபாத்திரம் சுதந்திரத்தை ஆத்மார்த்தமாக ரசிக்கும் ஒரு கதாபாத்திரமாக அமைக்கப்பட்டிருந்தது.
எவ்வளவு நெருங்கி பழகினாலும் எவ்வளவு அன்பு செலுத்தினாலும் திடீரென்று சொல்லாமல் கொல்லாமல் அவர்களை விட்டு பிரிந்து கபீரால் சென்றுவிட முடியும் . கபீரை தன் வாழ்க்கையில் நிறுத்தி வைக்க விரும்பும் அவரது நண்பர்களுக்கு அவனை மன்னித்து தன் போக்கில் விடுவதை தவிர வேறு வழியும் தெரிவதில்லை. ஆனால் இவ்வளவு சுதந்திரமாக அவன் தன் வீட்டிடம் இருந்த ஏன் தூரம் செல்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
இந்த படத்தில் தீபிகா நடித்த நைனா கதாபாத்திரம் ஒரு புத்தகபுழு கேரக்டருக்கு சமம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கதாபாத்திரம். தனது சின்ன வயது முழுவதும் எந்த வித கொண்டாட்டமும் இல்லாமல் அடக்கமாக படித்து சாதுவாக இருப்பவர். ஆனால் தனது குணத்திற்கு முற்றிலும் நேர்மாறான கபீரை சந்திக்கும்போது அவள் அவனால் சீண்டப்படுகிறார். முதலில் கபீரை எச்சரிக்கையுடன் அணுகும் நைனா போகப்போக கபீரைப்போல் தனக்கும் வாழ்க்கையைக் கொண்டாடுவது பிடித்திருக்கிறது என்று உணர்ந்துகொள்கிறாள்.கபீரின் மேல் காதலும் கொள்கிறாள். ஆனால் அதை அவனிடம் படத்தின் இறுதிவரை மறைத்து வைக்கிறார்.
ஆதித்யா மற்றும் கல்கி கோச்லின் ஆகிய இருவர்களின் கதாபாத்திரம் எந்த வித நிபந்தனையும் இல்லாமல நமக்கு அமையும் நல்ல நட்பை நினைவுபடுத்தும் கதாபாத்திரங்கள்.இவை எல்லவற்றையும் கடந்து இந்தப் படத்தின் மொத்த உணர்வுகளையும் தாங்கியவை படத்தின் பாடல்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கபீரா பாடல். இந்தப் பாடலின் சில வரிகள் கபீர் கதாபாத்திரத்தை புரியவைத்துவிடும்
கபீரா பாடலின் சில வரிகள் (தமிழில்): த்
வெயிலையும் அல்லாமல் நிழலையும் தேர்வுசெய்யாத
உன் தன்னலம் எப்படியானது
கால்கள் ஓரிடத்தில் நிற்கு மறுக்கும்
உனது தன்னலம் எப்படியானது
ஏழு கடல் ஏழு மலைகள் கடந்தும்
நீ உன்னுள் வறண்டிருப்பது ஏன்? கபீரா..
சொல்வதைக் கேள்..உன்னை உன் நிழல் அழைக்கிறது.