ஜெயமோகனின் சிறுகதை...போட்டிப் போட்ட மணிரத்னம், பாலா, வெற்றி மாறன்...கடைசியில் வென்றது யார் தெரியுமா?
வெற்றிக்காக அவர் நண்பர் சுப்ரமணியம் சிவா ரஃபீக்கிடம் பேசினார். ரஃபீக் தன் வாழ்க்கை இது, முடியாது என மறுத்துவிட்டார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ என்ற சிறுகதை திரைப்படமாக உருவாகவுள்ள நிலையில் அதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன், 2006 ஆம் ஆண்டு வெளியான மலையாள இயக்குனர் லோகிததாசு இயக்கத்தில் பிரசன்னா, மீரா ஜாஸ்மின் நடித்த கஸ்தூரிமான் படத்தின் மூலம் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து அங்காடித் தெரு, நீர்ப்பறவை, நான் கடவுள்,கடல், காவியத்தலைவர், சர்கார், 2.0 என பல படங்களிலும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, இந்தியன் 2, வேட்டையாடு விளையாடு 2 போன்ற படங்களின் திரைக்கதையிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
இதனிடையே அடுத்தடுத்து அவரது சிறுகதைகள் திரைப்படமாக உருவாகி வருகிறது. அதில் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலையும் ஒன்று. அதேபோல் கைதிகள் என்ற சிறுகதை டர்மெரிக் மீடியா மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஆஹா தமிழ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது. ரஃபீக் இஸ்மாயில் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த கைதிகள் சிறுகதை குறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கைதிகள் கதை படமாகிறதா என பல கேள்விகள். ஆமாம், படமாகிறது. அதற்குப்பின் ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதையே ஒரு கதையாக எழுதி படமாக்கலாம்.ரஃபீக் இஸ்மாயில் என்னும் உதவி இயக்குநர் என்னை அணுகி கைதிகளை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கோரினார். நாற்பது நிமிட படம். சொந்தச்செலவில். அவர் பவா செல்லதுரை வழியாக என்னை அணுகினார். விஷ்ணுபுரம் விருது விழாவில் என்னை வந்து கண்டு அந்தக் கோரிக்கையை முன்வைத்தார். 2018 என நினைக்கிறேன்.