Highest YouTube Subscribers | Youtube சப்ஸ்கிரைபர்களில் உலக சாதனை படைத்த T-Series சேனல்..
யூடியூப் தளத்தில் அதிகமான பயனாளர்கள் கொண்ட செனலாக டி சீரிஸ் சேனல் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மியூசிக் மற்றும் படங்கள் தயாரிப்பு நிறுவனமாக டி-சீரிஸ் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தை குல்ஷான் குமார் என்பவர் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் யூடியூபில் டி-சீரிஸ் என்ற செனல் உள்ளது. அந்த யூடியூப் செனல் தற்போது பெரியளவில் பயனாளர்களை தன் பக்கம் ஈர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அதன்படி டி-சீரிஸ் யூடியூப் செனலை 200 மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதன்மூலம் யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட செனலாக இது உலக சாதனை படைத்துள்ளது.
World’s NO. 1 Youtube channel, T-Series has hit 200 million subscribers, becoming the 1st channel in the world to ever reach this landmark! It's a proud moment for the entire country that an Indian channel sits at the top of YouTube in the world.
— T-Series (@TSeries) December 6, 2021
#TSeriesHits200MilSubs pic.twitter.com/V4MiMGKdBI
இந்நிலையில் உலக சாதனை படைத்துள்ள இந்த நிறுவனத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இதுதொடர்பாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரை பலரும் டி சீரிஸ் செனலுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். டி-சீரிஸ் செனல் கடந்த 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது குல்ஷான் குமார் இந்தச் செனல் தொடங்கியுள்ளார். அதன்பின்னர் 1997ஆம் ஆண்டு குல்ஷான் குமாரை கொலை செய்யப்பட்டார். அவருடைய மறைவிற்கு பின்பு சகோதரர் கிருஷ்ண குமார் மற்றும் மகன் பூஷன் குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தை பார்த்து வருகின்றனர்.
இந்த டி-சீரிஸ் நிறுவனம் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, கன்னடா, போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளில் யூடியூப் செனல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க....
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்