Kavin's Beast Update | அரபிக்குத்து பாத்தாச்சு ப்ரோ.. அதுல பாத்தீங்கன்னா.. கவின் கொடுத்த சூப்பர் பீஸ்ட் அப்டேட்..
அந்த ப்ரோமோ ஷூட் பண்ணது எங்களுக்கு தெரியாது, ஆனா அரபிக் குத்து ஷூட் பண்ணது பாத்தோம். தளபதி ஆடுறத அப்படி நின்னு பாத்தோம்ங்கற பெருமை இருக்கு..
![Kavin's Beast Update | அரபிக்குத்து பாத்தாச்சு ப்ரோ.. அதுல பாத்தீங்கன்னா.. கவின் கொடுத்த சூப்பர் பீஸ்ட் அப்டேட்.. Weve already watched arabic kuthu Interview with Kavin the actor who worked as Nelson's assistant Kavin's Beast Update | அரபிக்குத்து பாத்தாச்சு ப்ரோ.. அதுல பாத்தீங்கன்னா.. கவின் கொடுத்த சூப்பர் பீஸ்ட் அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/12/fc218b63896d6f08c28f3c4856e43920_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில், நடிகர் கவினும் அவரது வெப் சீரிஸ் இயக்குனர் எனோக்கும் உதவி இயக்குநராக பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் கவின் நெல்சன் திலீப்குமாருடைய உதவி இயக்குனர் என்பதால் அவரிடம் செல்லுமிடமெல்லாம் பீஸ்ட் குறித்து கேட்கப்படுகிறது. அவரது வெப் சீரிஸ் ஆன 'ஆகாஷ் வாணி'யின் இயக்குனர் எனோக் என்பவரும் நெல்சனுடைய அசிஸ்டண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் டாக்டர் படத்தில் இருந்தே நெல்சனிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது, ‘பீஸ்ட்’ படத்திலும் உதவி இயக்குநராக இருப்பவர்கள், ஷூட்டிங்கின்போது தளபதி விஜய் நடனம் ஆடுவதை கண்டதாக அவர்களது வெப் சீரிஸ் வெளியீட்டு ப்ரோமோஷன் நேர்காணலில் தெரிவித்துள்ளனர்.
"இது குறித்து கவின் பேசியதாவது, "அந்த ப்ரோமோ ஷூட் பண்ணது எங்களுக்கு தெரியாது, ஆனா அரபிக் குத்து ஷூட் பண்ணது பாத்தோம். தளபதி ஆடுறத அப்படி நின்னு பாத்தோம்ங்கற பெருமை இருக்கு. எல்லோருமே சொல்ற விஷயம் தளபதின்னா டான்ஸ்தான்னு, அதையே நேர்ல பாத்துட்டோம்ன்னு ஒரு பெரிய சந்தோஷம். அப்புறம் எல்லாரும் வெயிட் பண்ற ஒரு பாட்டு, அத நாங்க கேட்டு, தளபதி டான்ஸையும் பாத்துட்டோம் அப்டின்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கு தளபதிகிட்ட அவர் டான்ச விட ஃபைட் தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் இப்போலாம் அவருக்கு ஃபைட்ல கண்ணுக்கு ஒரு ஷாட் வைப்பாங்க, கண்லயே ஃபயர் காமிப்பாரு அப்படி இருக்கும்." என்று கூறியிருந்தார்.
விஜய் தொலைக்காட்சி வளர்ந்துவிட்ட மற்றொரு நடிகராக வலம் வரும் கவின், ’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் தனது தனித்துவ நடிப்பால் கவனம் ஈர்த்தார். பிக்பாஸ் மூலம் இன்னும் பெரும் புகழை அடைந்தார். ஏற்கனவே, ’நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வினீத் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதில் இடைபெற்ற 'இன்னா மயிலு' என்ற சிவகார்த்திகேயன் பாடிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது 'ஆகாஷ் வாணி' என்று பெயரிடப்பட்டுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். ஆகாஷ் மற்றும் வாணி என்ற இருவரின் காதல்தான் கதையாம்.
இந்த ம்யூசிக்கல் ரொமான்ஸ் காமெடி சீரிசை வேலன்டைன்ஸ் தின ஸ்பெஷலாக 'ஆஹா' ஆப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கியவரும் நெலசனிடம் உதவி இயக்குனராக இருந்த எனோக் என்பவர் தானாம். டாக்டர் திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருக்கும்போது ஏற்பட்ட நட்பில்தான் இந்த சீரிஸ் தொடங்கியது என்று கூறியிருந்தனர். இந்தத் தொடருக்கு குணா இசையமைக்க, சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் இந்தத் தொடருக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)