Vijay Varma - Tamannaah : செம்ம ட்விஸ்ட்... தமன்னாவுடன் விஜய் வர்மா லஞ்ச் டேட்... உறவு குறித்து முதல்முறையாக தெளிவான பதில்
விஜய் வர்மா எனது 'லஞ்ச் டேட்' யாருடன் இருந்தது என்பதை நான் புகைப்படத்துடன் நிரூபிக்கிறேன் என ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்து ஷாக் கொடுத்துள்ளார்

புத்தாண்டை முன்னிட்டு கோவாவில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் லிப் லாக் கிஸ்ஸிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் விஜய் வர்மா மற்றும் தமன்னா. அன்று முதல் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் என வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வந்தது. அவர்கள் இருவரும் கோவாவில் நடைபெற்ற பார்ட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர் ஆனால் வெளியேறும்போது இருவரும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது. அவர்களின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியது. இந்த வதந்திகளுக்கு இருவர் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வராத நிலையில் முதல் முறையாக வெளிப்படையாக பதிலளித்துள்ளார் விஜய் வர்மா.

விஜய் வர்மா லஞ்ச் டேட் :
ஜனவரி 17-ஆம் தேதியன்று தமன்னாவுடன் லஞ்ச் டேட் செய்ததாக வதந்தி ஒன்று பரவி வந்தது. அதற்கு விஜய் வர்மா எனது 'லஞ்ச் டேட்' யாருடன் இருந்தது என்பதை நான் புகைப்படத்துடன் நிரூபிக்கிறேன் என ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த நபர் அது வேறு யாருமல்ல, டெவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இயக்குனர் சுஜோய் கோஷ். இந்த போஸ்ட்க்கு எனது லஞ்ச் டேட் என ட்வீட் செய்து இருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய் வர்மா சுஜோய் கோஷுடன் சேர்ந்து ஒரு மிர்ரர் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார்.
My lunch date🤷🏻♂️@sujoy_g https://t.co/I9jT7gupzV pic.twitter.com/nKKW8S0vkH
— Vijay Varma (@MrVijayVarma) January 17, 2023
தமன்னா - விஜய் வர்மா நட்பு :
மேலும் தமன்னாவுடனான நட்பு லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் மூலம் ஆரம்பித்துள்ளது. அப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். ஆடிஷன் சமயங்களில் இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர். அவர்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே. அவர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் எண்ணம் தற்போது இல்லை என கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
View this post on Instagram
தமன்னா மற்றும் விஜய் வர்மா இடையில் காதல் என்று கூறப்பட்டது வதந்தியே என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















