Viral Photo | செம்மல்ல.! அன்றும்.. இன்றும்.. தனுஷும்.. விஜய் சேதுபதியும்.. சரசர உயரமும், உழைப்பும்
விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்து துணை நடிகர் விருது கிடைத்தது.
தென்னிந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு அசைவுகளும் சினிமா சபைகளில் அதிகம் கவனம் பெருகின்றன. தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோக்களும் கூட விஜய் சேதுபதியின் ரசிகர்கள். விஜய் சேதுபதி படத்தில் தனக்கான ரோல் சரியாக இருந்து, கதைக்களம் சிறப்பாக இருந்தால் ஓகே சொல்லிவிடுகிறாராம் . குறைந்த பட்ஜெட் படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் என்ற பாகுபாடு பார்ப்பது இல்லையாம். படங்களின் பட்ஜெட்டுகளுக்கு ஏற்ப தனது சம்பளத்தில் சமரசம் செய்துக்கொள்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஹீரோ , வில்லன் என்பதை தாண்டி தற்போது தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார். படங்களை அள்ளித்தூவும் போதும் சில படங்கள் விஜய் சேதுபதி அடிவாங்குவதும் உண்டு. பரபரவென சினிமாவில் மேலே மேலே சென்றுகொண்டிருக்கும் விஜய் சேதுபதி இன்று தேசிய விருதை வென்றார்.
விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்து துணை நடிகர் விருது கிடைத்தது. அப்போது அவர் கூறுகையில், “தேசிய அளவிலான கலைஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தில்இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவை மட்டும் நம்பி நடித்தேன். தேசிய விருது பெறுவது மகிழ்ச்சி” என்றார்.
இன்றும் சாதனையாளராக பார்க்கும் விஜய் சேதுபதி சினிமாவில் நுழையும் பலருக்குமே ஒரு ஊக்கம் தான். பல சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களாக நடித்து, கூட்டத்தில் ஒருவனாக நின்று, இன்று தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.குறிப்பாக புதுப்பேட்டை படத்தில் தனுஷ் வசனம் பேச பின்னால் நிற்கும் கூட்டத்தில் ஒருவனாக நிற்பார் விஜய் சேதுபதி.
அதே வீவ் இன்று விருது பெரும் வீவாக மாறி இருக்கிறது. அதாவது திரைப்படத்தில் தனுஷுக்கு பின்னால் கூட்டத்தில் ஒருவனாக நின்ற விஜய் சேதுபதி இன்று தேசிய விருது வாங்கும் விழாவிலும் தனுஷுக்கு பின்னால் அமர்ந்து இருக்கிறார், தேசிய விருது வாங்குவதற்காக. அந்த படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள பலரும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:Jail Movie Release: உலகம் முழுக்க ’ஜெயில்’ - வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா!
maaran | ஓடிடியில் வெளியாகிறதா தனுஷின் மாறன் ? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!