Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
தேனிலவிற்குச் சென்ற இடத்தில் விஷால் விவாகரத்து கேட்ட நிலையில், பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இசை விஷாலை மியூசிக் போட்டி நடக்கும் இடத்திற்கு வர வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
டைவர்ஸ் கேட்ட விஷால்:
அதாவது, விஷால் இந்த போட்டியில் கலந்துக்கணும்னா விவாகரத்து வேண்டும் என்று கேட்க இசை அதிர்ச்சி அடைகிறாள். பிறகு இசை இசை விஷாலை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக சம்மதம் தெரிவிக்கிறாள். அதே நேரத்தில் இந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சா மட்டும்தான் விவாகரத்து கொடுப்பேன் என்று சொல்ல விஷால் அது கஷ்டம் என்று சொல்கிறான்.
விஷாலுக்கு கண்டிஷன்:
நீங்க போட்டியில் ஜெயிச்சா கண்டிப்பா விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடுவேன் என இசை வாக்கு கொடுக்கிறாள். இதனால் விஷால் என்ன செய்வது என தெரியாமல் யோசிக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















