மேலும் அறிய

Jail Movie Release: உலகம் முழுக்க ’ஜெயில்’ - வெளியிடுகிறார் ஞானவேல் ராஜா!

சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜெயில்’ திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

ஆல்பம், வெயில், அங்காடி தெரு, காவியத் தலைவன், அரவான் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் வசந்தபாலன். எளிய மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுகளையும் தொடர்ந்து பதிவு செய்யும் வசந்தபாலனுக்கென்று தனி ரசிகர் வட்டம் உண்டு.

இவர் தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து “ஜெயில்” என்ற படத்தை இயக்கியுள்ளார். க்ரிக்ஸ் சினி கிரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில், தேன் படம் மூலம் அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், இசையமைப்பாளர் சிற்பியின் மகனான நந்தன் ராம்,  ‘பசங்க’ பாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகனான ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவையும், ரேமண்ட் டெரிக் க்ரிஸ்ட்டா எடிட்டிங்கையும் கவனித்துள்ளனர். ஜி.வியின் இசையில், கபிலன், சினேகன், தெருக்குரல் அறிவு, பேரன்பு படத்தில் பாடல் எழுதிய கருணாகரன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கபிலன் வரிகளில் தனுஷ் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் வெளியாகி யூட்யூபில் இரண்டு கோடி பார்வையாளர்களை கவர்ந்து படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்திருக்கும் சூழலில் படத்தை வெளியிடுவது தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இதற்கிடையே, ஜெயில் திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பார்த்துவிட்டது எனவும் அதனை வெளியிடப்போகிறது எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜெயில் திரைப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதனை தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்.

இதுகுறித்து வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில்,  “ஜெயில் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்கள் உலகமெங்கும் படத்தை வெளியிடுகிறார். விரைவில் இசை வெளியீடு... திரைப்பட வெளியீட்டு செய்திகள் வரும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rajinikanth : ” ரொம்ப சந்தோஷமான ரெண்டு விஷயம்” : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

Biggboss Tamil 5 | நேராவே சொல்லிடுறேன்... என்ன இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க.. கமல் வைத்த ட்விஸ்ட்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget