மேலும் அறிய

Vijay Antony: "மகளுடன் நானும் இறந்துவிட்டேன்” - மனதை சுக்குநூறாக்கும் விஜய் ஆண்டனியின் ட்வீட்

மறைந்த தன் மகள் பற்றி முதன்முறையாக மனம் திறந்து விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனியின் மகள் கடந்த செப்டெம்பர்.19ஆம் தேதி நள்ளிரவு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவால் வாடி வந்த விஜய் ஆண்டனி முதன்முறையாக மகள் குறித்து பதிவிட்டுள்ளார். 

விஜய் ஆண்டனி பதிவு

“அன்பு நெஞ்சங்களே..  என் மகள் மிகவும் அன்பானாவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்றிருக்கிறாள்.

என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள், அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.  நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. மகளின் அறையில் சத்தம் கேட்டத்தைப் பார்த்து சென்ற விஜய் ஆண்டனிக்கு அவரது மரணம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

12ஆம் வகுப்பு படித்து வந்த மகள்

உடனடியாக ஓமந்தூரார் மருத்துவனைக்கு எடுத்து செல்லப்பட்ட அவரது உடல்  உடற்கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே 12ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் விசாரணையும் தொடங்கியது. 

கே.கே. நகரில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது மகளின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், விஜய் ஆண்டனிக்கும் ஆறுதல் கூறினர். விஜய் ஆண்டனியின் மகளுடன் படித்த பள்ளி தோழிகள், ஆசிரியர்கள் என அனைவரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், 20ஆம் தேதி காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் விஜய் ஆண்டனியின் மகளுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. 

ரசிகர்கள், திரைத்துறையினர் ஆறுதல்

இரண்டு நாட்களாக மகளைப் பிரிந்த துக்கத்தில் இருந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக மனதை ரணமாக்கும் இந்தப் பதிவை பகிர்ந்துள்ளார். மகளைப் பிரிந்து வாடும் தந்தையின் வலியைக் கூறும் வகையில் அமைந்துள்ள இந்த வார்த்தைகள் காண்போரை உருக வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மகளின் பெயரில் நல்ல காரியங்கள் செய்ய உள்ளதாகவும் தனது பதிவில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார். இந்த பேரிழப்பில் இருந்து விரைவில் அவர் மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. இந்த நிலையில், பிச்சைக்காரன்2 படத்தில் நடித்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த விஜய் ஆண்டனி அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டு வந்தார்.

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget