Vignesh Shivan: நயன், உலகம், உயிருடன் நான்...! குடும்பத்துடன் முதல் புத்தாண்டை கொண்டாடிய விக்னேஷ் சிவன்..!
விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாரா, இரட்டை குழந்தைகள் உயிர் மட்டும் உலகத்துடன் குடும்பமாக கொண்டாடிய முதல் புத்தாண்டு ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா - திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்த நான்காவது மாதத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் பூதாகரம் எடுத்தது.
ஏராளமான சட்ட சிக்கல்கள், விசாரணை நடைபெற்று கடைசியாக அரசு தரப்பில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்த விவகாரம் சட்டப்படி தான் என்ற பிறந்த தகவல் வெளியானது. எனவே இந்த ஆண்டு இந்த தம்பதியினரின் திருமணம், குழந்தைகள் என குடும்பமாக புத்தாண்டை வரவேற்றனர்.
Thank You 2022 - 2 0 Two Two !! You were Twoooooo Good to me ! Here’s my detailed heartfelt gratitude note to everyone who made this year soooo special for me !
— Vignesh Shivan (@VigneshShivN) January 1, 2023
ThankYou thread 2022 - 2023
Part 1 ☺️😇 - On a scale 10 she’s Nayan & me the 1😍#WikkiNayan #Wedding #Nayanthara pic.twitter.com/9uN6Nyp5wA
நன்றி 2022 – 2 0 டூ டூ!!
ஜனவரி 1ம் தேதியன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது மனைவி நயன்தாரா மற்றும் மகன்கள் உலகம் மற்றும் உயிர் ஆகிய மூவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன் சேர்த்து அழகான குறிப்பையும் பகிர்ந்துள்ளார். “நன்றி 2022 – 2 0 டூ டூ!! இந்தாண்டு நீங்கள் எனக்கு சிறப்பாக இருந்தீர்கள். இந்த ஆண்டை எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்" என்ற குறிப்பையும் பகிர்ந்துள்ளர் விக்னேஷ் சிவன்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் முதல் ‘கனெக்ட்’ ரிலீஸ் வரையிலும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒரு பங்காக இருந்தது, நயன்தாராவுடனான திருமணம், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் என இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஏகே-62வை எதிர்நோக்கும் விக்கி:
மிகப்பெரும் வாய்ப்பான ஏகே-62 திரைப்படம் மூலம் அஜித் சார் மற்றும் லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு அவர்களுக்கு நன்றி. இந்த ஆண்டும் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, ஏரளமான கடின உழைப்புடன் இந்த ஆண்டு அமைய எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்.
நீங்கள் செய்யும் அனைத்து காரியத்தின் ஒவ்வொரு பகுதியையும் கொண்டாடுவீர்கள் என நான் நம்புகிறேன். சிறு சிறு விஷயங்கள் தான் வாழ்விற்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதால், அனைவரும் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, பெரிய விஷயங்கள் அனைத்தும் தாமாகவே நடைபெறும். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். அன்புடன் விக்கி என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன்.