18 வயதில் மர்ம மரணம்! வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஹாலிவுட் நடிகர்!
இளம் ஹாலிவுட் நடிகர் டைலர் சாண்டர்ஸ், திடீரென மரணம் அடைந்தார்
இளம் ஹாலிவுட் நடிகர் டைலர் சாண்டர்ஸ், திடீரென மரணம் அடைந்தார். 18 வயதே ஆன அவர் உயிரிழந்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, வரும் நாள்களில் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
911: Lone Star actor Tyler Sanders dead at 18
— That girl🌸🇬🇧🇦🇺🚲🏃🏽♀️ (@Thatgir59027562) June 17, 2022
No matter what the cause, too many young deaths of late. https://t.co/97OHexyTH6
இதுகுறித்து டைலரின் பிரதிநிதி பீட்டர் டாபியா கூறுகையில், "நல்ல குடும்பத்தில் இருந்த வந்த நல்ல குழுந்தையாகவே டைலர் நினைவு கூறப்படுவார்" என்றார்.
ஐந்து நாள்களுக்கு முன்புதான் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நீல நிற ஆடையை அணிந்த படி, ஸ்டைலிங் என பதிவிட்டுள்ளார்.
The young actor, who was also in “Fear the Walking Dead” and “Just Add Magic: Mystery City,” died Thursday in his Los Angeles home. https://t.co/eyQBDL35R8
— HuffPost (@HuffPost) June 17, 2022
அவரின் இறப்பு செய்தி கேட்டு பல்வேறு முனைகளில் இருந்து இரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Emmy-nominated actor Tyler Sanders dies, aged 18 ⬇️ https://t.co/G0bObTy8FM
— The Independent (@Independent) June 17, 2022
Just Add Magic: Mystery City தொடரில் நடித்து பிரபலமான அவர், 9-1-1: Lone Star, Fear the Walking Dead ஆகிய தொடர்களில் விருந்தினர் தோற்றத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்