20 Years Actress Trisha:"அவள் உலக அழகியே !,நெஞ்சில் விழுந்த அருவியே" - நடிகை திரிஷாவின் டாப் 10 சுவாரசிய தகவல்கள்!
தமிழ்,கன்னடம்,தெலுங்கு ஆகிய திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான ரஜினி,புனித் ராஜ்குமார்,சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமை திரிஷாவையே சாரும்.
1.அமீரின் 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் தடம் பதித்த திரிஷாவுக்கு இன்றுடன் 20 ஆண்டு சினிமா வாழ்க்கை நிறைவாகியுள்ளது.
2.மாடலிங் துறையில் பயணத்தை தொடங்கிய இவர் 1999 இல் 'மிஸ் சேலம் ','மிஸ் மெட்ராஸ்' ஆகிய பட்டத்திற்கும் ,2001 ஆம் 'மிஸ் இந்தியா' பட்டத்திற்கும் சொந்தக்காரரானார் திரிஷா .
3.பட்டங்களை குவித்த பின்பு ,தனது 16 வது வயதில் நடிகை சிம்ரனுடன் 'ஜோடி' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
4.திரைப்படங்கள் மட்டுமின்றி தனது தொடக்க காலங்களில் 'ஹார்லிக்ஸ்' விளம்பரங்களில் நடித்தார்.
5.தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'பவர்' திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும்,2018 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹே ஜுட்' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தார்.
6.தமிழ்,கன்னடம்,தெலுங்கு ஆகிய திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான ரஜினி,புனித் ராஜ்குமார்,சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமை திரிஷாவையே சாரும்.
7.நடிகர் தனுஷுடன் 'ஆடுகளம்' திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் திரிஷாதான். ஆனால், அதன் பின் சில காரணங்களால் அது தவறியது. அதனை தொடர்ந்து தனுஷுடன் 'கொடி' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.
8.நடிகை திரிஷாவின் உண்மையான கனவு ஒரு கிரிமினல் சைக்காலாஜிஸ்ட் ஆக வேண்டும் என்பது தான்.
9.'தனலட்சுமி','ஜெஸ்ஸி','ஜானு','குந்தவை' போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் பெரிதும் பரிட்சையமான நடிகை திரிஷா சினிமாவை தாண்டி ஒரு விலங்கு பிரியரும் கூட.
10.20 ஆண்டுகள் திரைப்பயணத்தை கடந்த நடிகை திரிஷாவின் அடுத்த ரிலீஸ்,பொன்னியின் செல்வன் - 2. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ' தளபதி 67' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என நெட்டிசன்களிடம் பேசப்பட்டு வருகிறது.