New Tamil Serials: இன்று முதல் 2 புத்தம்புதிய சீரியல்கள்.. ஜீ தமிழில் மற்ற சீரியல்கள் நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ!
New Serials in Zee Tamil:அக்டோபர் 9ஆம் தேதியான இன்று முதல் ‘நளதமயந்தி’ மற்றும் ‘சந்தியாராகம்’ என இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி மக்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதியான இன்று முதல் ‘நளதமயந்தி’ மற்றும் ‘சந்தியாராகம்’ என இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன. இன்று முதல் நளதமயந்தி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கும், சந்தியா ராகம் சீரியல் இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு சீரியல்களின் எண்ட்ரியால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
அக்டோபர் 8-ம் தேதியுடன் தவமாய் தவமிருந்து சீரியல் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பேரன்பு சீரியல் மதியம் 3.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல், மாலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதிய வேளையில் 45 நிமிடங்களாக ஒளிபரப்பாகி வந்த கனா மற்றும் சண்டக்கோழி ஆகிய சீரியல்கள் இனி பழையபடி 30 நிமிடங்களாக ஒளிபரப்பாக உள்ளன.
அதாவது கனா சீரியல் மதியம் 2 மணிக்கும், சண்டக்கோழி சீரியல் மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் 8.30 மணி முதல் 10 மணி வரை அண்ணா, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்கள் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாக உள்ளன.
புதிய நேர மாற்றத்துடன் பழைய சீரியல்களையும் என்ட்ரி கொடுக்கும் புத்தம் புதிய இரண்டு சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.