TN Budget 2025: தமிழ்நாட்டில் 7 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டம்: எங்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
Tamil Nadu Budget 2025: 2025- 2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்கண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2025- 2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில் கூட்டு குடிநீர் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 7 இடங்களில் கூட்டு குடிநீதி திட்டம் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 526 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 1,820 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.07 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகள், தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1,042 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 2,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.22 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியி்ருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 864 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.64 இலட்சம் மக்கள் வகையில் மேற்கொள்ளப்படும். பயன்பெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.91 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 374 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 92,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 138 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 76,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.





















