Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
Tamil Nadu Budget 2025 :50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.

உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2025-26:
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சஎ தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். இதில் மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்
மூன்றாம் பாலினத்தவருக்கு சம வாய்ப்பு:
மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்விற்கென, முன்னோடியாக பல்வேறு புதுமையான நாட்டிற்கே திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையாததாகும். எனவே, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இதையும் படிங்க: TN Budget 2025: வேளச்சேரியில் மேம்பாலம்! ஸ்பாஞ்ச் ஸ்பா! புதிய நகரம்! சென்னைக்கு அடித்த ஜாக்பாட்! லிஸ்ட்டை பாருங்க
ஊர்க்காவல் படை:
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய விழிப்புணர்வினையும், வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பையும் வழங்குவதன் மூலமே. அவர்களுடைய கண்ணியமான வாழ்வினை உறுதிசெய்திட முடியும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது. இந்த உயர் நோக்கத்தினை முன்னிறுத்தி, ஓர் முன்னோடி முயற்சியாக மூன்றாம் பாலினத்தவரை. போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில், உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு, சென்னை தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பணிபுரியும் மூன்றாம் I பாலினத்தவரின் மதிப்பூதியம், பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்குச் சமமான வகையில் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சி மூலம், மூன்றாம் பாலினத்தவர்களின் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வு உறுதி செய்யப்படுவதுடன் அவர்கள் சமூக நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து வாழ்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
இதையும் படிங்க: TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்
மேலும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.






















