மேலும் அறிய

தினமும் தூக்கம் வரமா கஷ்டப்படுறீங்களா.. நல்லா தூக்கம் வர இதை செய்யுங்கள் !

தூக்கம் என்பது பராமரிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆரோக்கியப் பழக்கம். தூக்கம் போதுமான அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும், மனச்சோர்வு குறையும் - என மனநல ஆலோசகர் தெரிவிக்கின்றார்.

நாளையதை நாளைக்கு விட்டுட்டு அமைதியாக தூங்கவும் - உலக தூக்க தின சிறப்பு செய்தி.

2025 உலக தூக்க தினம்
 
இன்று உலகம் முழுவதும் “உலக தூக்க தினம்” (World Sleep Day) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தூக்க தினத்தின் நோக்கம், நல்ல தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, தூக்கக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். நமது உடல் மற்றும் மனநலத்திற்காக தூக்கம் என்பது ஒரு அடிப்படையான தேவை. சரியான தூக்க பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் வழங்குகிறது.  
 
தூக்கத்தின் முக்கியத்துவம்
 
தூக்கம் என்பது உடல் மற்றும் மனசுக்கு ரீச்சார்ஜ் மாதிரி. போன் சார்ஜ் பண்ணின மாதிரி, நம்ம உடம்பையும் தூக்கம் ரீசெட் பண்ணும். தூக்கம் போதுமான அளவில் இருந்தால், உடலும் மனசும் புத்துணர்ச்சியுடன் செயல்படும். தினசரி வாழ்க்கையில் நிறைவு மற்றும் செயல்திறனை தூக்கம் அதிகரிக்கிறது.  
நல்ல தூக்கம் இருந்தால் மனம் தெளிவாக இருக்கும், யோசனை விரைவாக நடைபெறும்,  ஒரே விஷயத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும், கோபம், கவலை, மனச்சோர்வு குறையும், உடல் நோய்கள் குறையும்.
 
தூக்கம் குறைந்தால் ஏற்படும் விளைவுகள்  
 
தூக்கம் குறைபாட்டால் உடல் மற்றும் மனநலத்துக்கு பல விளைவுகள் ஏற்படும். மனச்சோர்வு, கவலை அதிகரிக்கும், முடிவெடுக்கும் திறன் குறையும் ஆரோக்கியம் பாதிக்கப்படும், உடல் எளிதில் சோர்வடையும், நோயெதிர்ப்பு சக்தி குறையும்.
 
இயற்கையை பின்பற்றும் தூக்க வழக்கம்
 
நம்ம உடல் இயற்கையின் ரிதத்திற்கு ஏற்ப தூங்கும். நாய் தூங்க விரும்பினால் தூங்கும், பறவைகள் மாலை நேரத்தில் தன்னுடைய கூட்டுக்கு  திரும்பும். ஆனாலும் மனிதர்கள் மட்டும் தான் இயற்கைக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் – மொபைல், வேலை, விளையாட்டுகள் போன்றவற்றால் தூக்க நேரம் மாற்றப்படுகிறது.  
அன்றாட உடலியக்க சுழற்சி (Circadian Rhythm) ஏற்ப தூங்கினால், உடல் மற்றும் மனம் சரியாக செயல்படும்.  
அதிகாலை எழுந்து, இரவில் விரைவாக தூங்கும் பழக்கம் மனதளவில் நல்ல பலன்களை வழங்கும்.  
 
தூக்கம் குறைவதற்கான முக்கிய காரணங்கள்
 
1. அதிக யோசனை நாளைக்கு என்ன நடக்கும்? பிரச்னை சரியாகுமா? இப்படி தொடர்ந்து யோசித்தால் மூளை ஓய்வில்லாமல் செயல்படும். இதனால் தூக்கம் தாமதமாகும்.  
 
2. மொபைல், டிவி பார்ப்பது - தூங்குவதற்கு முன்பு மொபைல், டிவி பார்ப்பது மூளையை விழிக்க வைக்கும். இதனால் தூக்கம் தாமதமாகும்.  
 
3. பயம் மற்றும் கவலை - எதிர்காலத்தைப் பற்றிய பயம், பதற்றம் தூக்கத்தை குறைக்கும். மனசு அமைதியாக இல்லாததால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.  
 
4. தூக்க நேரம் மாறுவது  - தினமும் ஒரே நேரத்தில் தூங்காமல் மாற்றி மாற்றி தூங்கினால், உடம்பின் அன்றாட உடலியக்க சுழற்சி ( (Circadian Rhythm) பாதிக்கப்படும்.  
 
5. உடல் அசைவு இல்லாதது - நாளை முழுவதும் உடல் அசைவு இல்லாமல் இருந்தால், உடம்பு சோர்வடையாது. இது தூக்கத்தை தாமதமாக்கும். 
 
6. சுற்றுப்புறம் அமைதியாக இல்லாதது - தூங்கும் இடத்தில் அதிக ஒளி, ஒலி இருந்தால் மூளை ஓய்வதில்லை. இதனால் ஆழ்ந்த உறக்கம் குறையும்.  
 
தூக்கத்தை சரிசெய்ய வழிகள்
 
நேரம் பின்பற்றவும்:  தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், எழவும்.  
 
ஸ்கிரீன் லைட்டை தவிர்க்கவும்: தூங்குவதற்கு முன்பு மொபைல், டிவி பார்ப்பதை தவிர்க்கவும்.  
 
ரிலாக்ஸ் ஆகும் பழக்கம்:  மெதுவான இசை கேளுங்கள், புத்தகம் படிக்கவும்.  
 
யோசனையை கட்டுப்படுத்தவும்: நாளையதை நாளைக்கு விட்டுட்டு அமைதியாக தூங்கவும்.  
 
உடல் அசைவு: தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யவும்.  
 
சுற்றுப்புறத்தை அமைதியாக வைத்துக்கொள்ளவும்: ஒளி, ஒலி குறைவாக, வசதியாக தூங்கும் இடத்தை வைத்துக்கொள்ளவும். தூக்கம் உடல் மற்றும் மன அமைதிக்கான அடிப்படையாக இருக்கிறது. சரியான தூக்க பழக்கங்கள் மனநலத்தை மேம்படுத்தும். தூக்கம் என்பது பராமரிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆரோக்கியப் பழக்கம். தூக்கம் போதுமான அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும், மனச்சோர்வு குறையும், மற்றும் நாளை இன்னும் சிறப்பாக வாழ முடியும். என மதுரையின் பிரபல மனநல ஆலோசகர் ப.ராஜ சௌந்தர பாண்டியன் தெரிவித்தார். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
Embed widget