Karthigai Deepam: நவீனை கொலை செய்ய சதி.. சாமுண்டீஸ்வரி மீது பழி போட திட்டம் - கார்த்திக் என்ன செய்வான்?
நவீனை கொலை செய்து அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட சிவனாண்டி சதி செய்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம் சீரியல்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நவீன் சிவனாண்டியின் சட்டையை பிடிக்க, இதை பார்த்த சாமுண்டீஸ்வரி நவீனை தப்பாக புரிந்து கொண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நவீனை எச்சரித்த சாமுண்டீஸ்வரி:
அதாவது நவீன் சாமுண்டீஸ்வரி பார்த்ததும் அத்தை நான் எதுவும் பண்ணல என்று சொல்ல, யாருக்கு யாருடா அத்தை? அவ எனக்கு பொண்ணே இல்லடா என்று சொல்லிக்கிட்டு இருக்கேன் அப்படி இருக்கும்போது நான் எப்படி உனக்கு அத்தை ஆவேன்? இன்னொரு முறை அத்தைனு சொன்ன அவ்வளவு தான் என்று எச்சரிக்கிறாள்.
சிவனாண்டி - சந்திரகலா ரகசிய சந்திப்பு:
அதன் பிறகு கார்த்திக் இதெல்லாம் சிவனாண்டி வேலை தான், உஷாராக இருக்க சொல்கிறான். பிறகு சிவனாண்டியும் சந்திரகலாவும் சந்தித்து ரகசியமாக பேசிக் கொள்கின்றனர். திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர்.
அடுத்த நாள் நவீனை சந்திக்கும் சிவனாண்டி சாமுண்டீஸ்வரி ஆபிஸ் வந்து உன்னை சந்திக்க சொன்னதாக சொல்ல நவீன் கிளம்பி செல்கிறான். நவீனை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த? இன்னொரு முறை என்னை பார்க்க வந்தால் சுட்டு தள்ளிடுவேன் என வார்த்தையை விடுகிறாள்.
அடுத்து என்ன நடக்கும்?
நவீன் வெளியே வந்ததும் அவனை சுற்றி வளைக்கும் சிவனாண்டியின் ஆட்கள் அடித்து மயங்க வைக்கின்றனர். நவீனை புதைத்து அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட முயற்சி செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















