Parijatham Serial: கண்ணாமூச்சி ஆடிய காதலன்.. வர்ஷினியை கொல்ல முயற்சித்த ஸ்ரீஜா அப்பா
Parijatham: பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் விஷால் லிப்டில் சிக்கிக்கொள்ள, இசை அவனை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வர்ஷினியை கடத்திய ஸ்ரீஜா அப்பா:
அதாவது விஷால் மற்றும் இசை என இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். மறுபக்கம் ராகவ் மற்றும் வர்ஷினி ஆகியோர் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
ராகவ் கண்ணை கட்டி கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ரீஜாவின் அப்பா வர்ஷினியை கடத்தி தூக்கி செல்கிறார். ராகவ் கண்ணை திறந்து வர்ஷினியை காணவில்லை என இங்கும் அங்கும் தேடுகிறான்.
கொலை முயற்சி:
கடத்தி செல்லப்படும் வர்ஷினியை மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















