Karthigai Deepam: ஹனிமூனில் கடத்தப்பட்ட ரேவதி! என்ன செய்யப்போகிறான் கார்த்தி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று ஹனிமூனுக்குச் சென்ற ரேவதியை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், ரேவதி பார்ட்டிக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
போதை ஜுஸை குடிக்கும் ரேவதி:
அதாவது, மாயா பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்து ஜூஸில் போதை மருந்தை கலக்குகிறாள். சர்வெண்ட் ஒருவனிடம் இந்த ஜூஸை கார்த்திக்கு கொடு என்று சொல்லி அனுப்புகிறாள்.
ஆனால் ரேவதி தவறுதலாக அந்த ஜூஸை குடித்து விடுகிறாள். இதையடுத்து ரேவதி போதையில் தள்ளாட தொடங்குகிறாள். பார்ட்டி முடிந்ததும் கார்த்தி மற்றும் ரேவதி என இருவரும் கிளம்பி ரூமுக்கு வருகின்றனர்.
ரேவதியின் உடை மாறியது எப்படி?
ரூமுக்கு வந்த ரேவதி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை என்று புலம்பி வாந்தி எடுத்து தூங்கி விடுகிறாள். அடுத்த நாள் காலையில் கண் விழிக்க அவளது உடை மாறி இருக்க ரேவதி இது எப்படி நடந்தது என ஷாக் ஆகிறாள்.
கார்த்தி தான் காரணமாக இருக்க வேண்டும் என அவனிடம் கோபப்படுகிறாள். பிறகு ஒரு பெண்மணி காபி கொண்டு வந்து குடிங்க மா தலைவலிக்கு நல்லா இருக்கும் என்று சொல்கிறாள். ரேவதி எனக்கு தலை வலிக்குது உனக்கு யார் சொன்னது என்று கேட்கிறாள்.
கடத்தப்பட்ட ரேவதி:
பிறகு அந்த பெண்மணி நைட் கார்த்தி தன்னை கூப்பிட்டு உங்களுக்கு உடை மாற்றி விட சொன்னதாக நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரேவதி பதில் பேச முடியாமல் நான் மாத்திரை வாங்க போறேன் என்று மெடிக்கல் ஷாப் கிளம்பி வருகிறாள்.
மாயா ஏற்பாடு செய்த ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.