Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! மண்டபத்திற்குள் வந்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி கடத்தப்பட்ட நிலையில், இன்று ரேவதிக்கு திருமணம் நடக்குமா? என்ற நிலையில், இன்று கார்த்திகை தீபம் சீரியல் நகர்கிறது.

Karhigதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை அடைத்து வைத்திருக்கும் குடோனை நெருங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கல்யாணத்தை நிறுத்திய ரேவதி:
அதாவது, கார்த்திக் சாமுண்டீஸ்வரியை கடத்திய சண்டையிட்டு அவளை காப்பாற்றுகிறான். மறுபக்கம் ரேவதி மணமேடை ஏற்றப்பட்ட நிலையில் மகேஷ் தாலி கட்ட வரும் சமயத்தில் ரேவதி தடுத்து நிறுத்துகிறாள்.
எல்லா நல்லது கெட்டதிலும் அம்மா இருப்பாங்க, அம்மா இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது? அரை மனதோடு நான் ஒப்பு கொண்டதாக அதிர்ச்சி கொடுக்கிறாள்.
சந்திரகலா ஒரு பக்கம், மாயா ஒரு பக்கம், மகேஷ் ஒரு பக்கம் என ஆளாளுக்கு ரேவதியை சமாதானம் செய்து கல்யாணத்தை நடத்தி வைத்து விட முயற்சி செய்கின்றனர்.
என்ட்ரி தந்த சாமுண்டீஸ்வரி:
ஆனால் ரேவதி அம்மா இல்லாமல் முடியாமல் என தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். ஒரு கட்டத்தில் அய்யரும் நல்ல நேரம் முடிந்து விட்டதாக சொல்ல மாயா, சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.
மேலும் இந்த நேரத்தில் சாமுண்டீஸ்வரியும் மண்டபத்திற்கு வந்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

