Ethirneechal : குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ஜீவானந்தம்... ஆதிரை-கரிகாலனுக்கு மறுபடியும் கல்யாணமா? எதிர்நீச்சலில் சஸ்பென்ஸ்
Ethirneechal Sep 28 episode : குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ஜீவானந்தம். கதிருக்கு போன் மூலம் ஆர்டர் கொடுத்த குணசேகரன். கரிகாலனுக்கு ஆதிரைக்கும் மறுகல்யாணம். எதிர்நீச்சல் என்ன நடந்தது?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் வெண்பா இன்னும் வீட்டை விட்டு கிளம்பாததால் ஈஸ்வரியுடன் சண்டை போடுகிறான் கதிர். உடனே இவ இங்க இருந்து கிளம்ப வேண்டும் என சொல்லிவிட்டு செல்கிறான்.
ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்திடம் இருந்து போன் வருகிறது. "குணசேகரன் இருக்கும் இடம் தெரிஞ்சுடுச்சு. போன்ல சொல்ல முடியாது அதனால் வெண்பாவை கூட்டிகிட்டு நேர்ல வாங்க" என ஈஸ்வரியிடன் ஜீவானந்தம் சொல்கிறார். ஈஸ்வரி சென்று ஜீவானந்தத்தை சந்திக்கிறாள்.
"குணசேகரன் பழனி - திண்டுக்கல் சாலையில் இருக்கும் ஒரு கிராமத்தில் பண்ணை வீடு ஒன்றில் இருக்கிறார். அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் மறைந்து இருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் ஏதோ பெரிய திட்டம் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. எந்த நேரம் வேண்டுமாலும் வீட்டுக்கு வரலாம்" என்கிறார் ஜீவானந்தம்.
ஈஸ்வரி ஜீவனத்திற்கு நன்றி சொல்லிவிட்டு வெண்பாவை வீட்டுக்கு கூட்டி செல்ல அழைக்கிறாள். அதற்கு ஜீவானந்தம் "நான் தான் வந்து விட்டேனே. வெண்பா இங்கேயே இருக்கட்டும். எங்களால் உங்களுக்கு வேறு எந்த பிரச்னையும் வேண்டாம்" என்கிறார். "உங்க வாழ்க்கைக்கும், வெண்பா எதிர்காலம் மீதும் எனக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. என்னால் இப்போது எதையும் உடைத்து சொல்ல முடியாது" என சொல்லிவிட்டு செல்கிறாள் ஈஸ்வரி.
ஈஸ்வரி வீட்டுக்கு வந்து ரேணுகா, ஜனனி மற்றும் நந்தினியிடம் குணசேகரன் இருக்கும் இடம் பற்றின உண்மையை சொல்கிறாள். "சும்மா நம்மை மிரட்டுவதற்காக பத்து கி.மீ தொலைவில் கூட இல்லை. போய் ஒளிஞ்சுக்கிட்டு இங்க இருக்குறவங்க எல்லாரையும் ஆட்டிவைச்சுகிட்டு இருக்கார்" என்கிறாள் நந்தினி. "ஆனா அவருக்காக பயந்து நாம ஒளியக்கூடாது. இந்த தடவ அவரா நாமளான்னு பாத்துடலாம்" என்கிறாள் ஜனனி.
கதிருக்கு குணசேகரன் போன் செய்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். விசாலாட்சி அம்மா, ஞானம் என அனைவரும் பேசுகிறார்கள். கதிரிடம் குணசேகரன் பேசும்போது "இந்த தடவ மிஸ்ஸே ஆகக்கூடாது" என்கிறார். "இந்த முறை பிசிறு தட்டாமல் நான் பாத்துக்குறேன். நீங்க எதுவும் கவலை படாதீங்க. இன்னும் இரண்டு நாளில் வந்துடுவீங்களா? சரி வாங்க அண்ணன்" என்கிறான் கதிர்.
அங்கு வந்த ஜான்சி ராணி இப்போ தான் நான் குலசாமி கோயிலுக்கு போய் பிராத்தனை செய்துவிட்டு வந்தேன். அதுக்குள்ள நல்ல செய்தி வந்துடுச்சு. எல்லாரும் பிரசாதம் எடுத்துக்கங்க என கொடுக்கிறாள்.
போனை வைத்ததும் "வீட்டில் வைத்து ஆதிரைக்கு கரிகாலனை மறுதாலி கட்ட வைக்க போறாராம்" என்கிறான் கதிர். ஜான்சி ராணியும் கரிகாலனும் சந்தோஷப்படுகிறார்கள். அதை கேட்டு ஷாக்கான ஆதிரை என்னால் இதுக்கு சம்மதிக்க முடியாது என்கிறாள். விசாலாட்சி அம்மா ஆதிரையை திட்ட அவள் அதையும் பார்க்கலாம் என சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறாள்.
திருவிழாவுக்கு ஏற்பாடு செய்வது பற்றி கதிருக்கும் ஞானத்திற்கும் சண்டை நடக்கிறது. மரியாதை இல்லாமல் பேசுகிறான் கதிர். விசாலாட்சி அம்மா அவர்களை வந்து சமாதானம் செய்கிறார். ஜான்சி ராணியும் சப்போர்ட்டுக்கு வந்து இந்த வீட்டு பொம்பளைங்க எல்லாம் ஏதோ தொழில் செய்றாளுங்கலாமே. கேக்கவே அசிங்கமா இருக்கு என ஏத்தி விடுகிறாள். விசாலாட்சி அம்மா குணசேகரனுக்கு ஏதோ கண்டம் இருக்கிறது என ஜோசியர் சொன்னதை நினைத்து கவலை படுகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.