Ethirneechal: உமையாளுக்கு நெருக்கடி தரும் குணசேகரன்: போலீஸ் ஸ்டேஷனில் ஜனனியின் குடும்பம்: எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal: ஜனனியின் அம்மாவும் தங்கையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். குணசேகரன் வீட்டில் இருந்து காணாமல் போன சித்தார்த். எதிர்நீச்சலில் பரபரப்பு..
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் உமையாள் மற்றும் சித்தார்த் நிச்சயதார்த்தம் முடியும் வரையில் குணசேகரன் அவரின் வீட்டிலேயே அவர்களை தங்கச் சொல்கிறார். இந்நிலையில் உமையாள் மிரட்டலாக சொன்னதை வைத்து பதட்டமடைந்த ஜனனி, தன்னுடைய அம்மா மற்றும் தங்கையைத் தேடி வீட்டுக்குச் சென்று பார்க்கிறாள். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அவர்களுக்கு அங்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் வீட்டில் தங்கி இருக்கும் உமையாள் மகள் இருக்கும் ரூமுக்கு சென்று "சித்து எங்க? அவனையும் கூட்டிட்டு வா" என சொல்ல "அவன் இங்க இல்லையே. காலையில இருந்தே நான் அவனை பார்க்கவே இல்லையே" என சொல்லவும் உமையாள் அதிர்ச்சி அடைகிறாள். சித்தார்த்துக்கு போன் செய்து பார்க்க சொல்கிறாள் உமையாள். ஆனால் சித்தார்த் போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைகிறாள்.
மாடியில் இருந்து வந்த குணசேகரன் எதிரில் உமையாள் வரவும் "நல்ல நேரம் நெருங்கிடுச்சு கிளம்பலாமா? தம்பி எங்க?" என கேட்கிறார் குணசேகரன். எதுவும் தெரியாதது போல "யாரு அண்ணன்?" என உமையாள் பாசாங்கு செய்ய "நம்ம மாப்பிள்ளை சித்தார்த்தன் தான்" என குணசேகரன் சொல்ல எதையெதையோ பதட்டத்துடன் சொல்லி சமாளிக்கிறாள் உமையாள். அதை அருகில் இருந்து பார்த்து கொண்டு இருந்த கதிர் சிரிக்கிறான். சமையலறை உள்ளே இருந்த நந்தினியும் ரேணுகாவும் கேட்டு விட்டு "எங்கேயோ இடிக்குதே" என தன்னுடைய ஸ்டைலில் நக்கல் செய்கிறாள் நந்தினி.
போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜனனியின் அம்மாவையும் தங்கையையும் அழைத்து சென்றுள்ளார்கள். அஞ்சனா எழுதி வைத்திருந்த லெட்டரை பார்த்து ஜனனியும் சக்தியும் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள். அங்கு உள்ள கான்ஸ்டபிளிடம் "லேடிஸ் தனியா இருந்த வீடு. இப்படி யாருக்குமே தகவல் சொல்லாமல் இங்க கூட்டிட்டு வந்து உட்கார வைத்து இருப்பது முதலில் தப்பு. எவ்வளவு நேரம் சார் இப்படியே அவங்களை உட்கார வைச்சுக்கிட்டு இருப்பீங்க" என சக்தி சொல்ல, கான்ஸ்டபிள் ஏதோ சக்தியிடம் சொல்கிறார்.
இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். சித்தார்த் காணாமல் போனதற்கு பின்னால் கதிரின் பிளான் ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது இந்த ப்ரோமோ. உமையாளுக்கு குணசேகரன் நெருக்கடி கொடுப்பதால் மிகவும் டென்ஷனாக பதட்டத்துடன் இருக்கிறாள் உமையாள். முதல் முறையாக அவள் இப்படி பதட்டப்படுவதை பார்த்த எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது.