Ethirneechal: உமையாளுக்கு குணசேகரன் செய்த சத்தியம்... நீதிபதியிடம் உண்மையை சொன்ன ஈஸ்வரி... எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal : கல்யாணம் முடிந்ததும் மாப்பிள்ளை பெயரில் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைத்து விடுவதாக சத்தியம் செய்து கொடுத்த குணசேகரன். தர்ஷினியின் திருமணம் பற்றி நீதிபதியிடம் சொல்கிறாள் ஈஸ்வரி.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் மீண்டும் தலைதூக்குகிறது தர்ஷினி கல்யாணம். கரிகாலனை விரட்டிவிட்டு குணசேகரன் தர்ஷினியை உமையாள் மகன் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வேலைகளை செய்து வருகிறார். சித்தார்த்தும் அஞ்சனாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் என்பது தெரிந்தும் இந்த சம்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகள் தொடர்கிறது.
அந்த வகையில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் வீட்டுக்கு வந்த உமையாளிடம் குணசேகரன் சத்தியம் செய்து கொடுக்கிறார். "இந்த கல்யாணம் நடக்கும் போது என்னோட சொத்து முழுக்க என்னோட மாப்பிள்ளை பேர்ல மாறிடும்... இது சத்தியம்" என உமையாளுக்கு சத்தியம் செய்கிறார். இதை கேட்டு ஈஸ்வரியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அடுத்த நாள் ஈஸ்வரி நீதிபதியிடம் அழைத்து செல்கிறார் சாரு பாலா. "என்னோட பொண்ணுக்கு 17 வயசு தான் ஆகுது. அதுக்குள்ள கல்யாண ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு" என நீதிபதியிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். சாருபாலாவும் ஈஸ்வரி சொல்வது உண்மை என நீதிபதியிடம் சொல்கிறார்.
ஜனனியும் சக்தியும் அஞ்சனாவை சென்று சந்திக்கிறார்கள். "அங்க அவ்வளவு பிரச்சினை ஆச்சு.. அதுக்கு அப்புறம் அத பத்தி ஏதாவது உன்கிட்ட போன் பண்ணி பேசினானா?" என சக்தி அஞ்சனாவை கேட்க "இல்ல மாமா எதுவும் பேசல" என அஞ்சனா சொல்ல "அப்புறம் எப்படி அவனை நம்புறது?" என ஜனனி கேட்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இத்தனை நாட்களாக தர்ஷினியை கடத்தி வைத்து கதைக்களத்தை மாதக்கணக்காக இழுத்தடித்தார்கள். இப்போது மீண்டும் தர்ஷினி கல்யாணத்தை வைத்து கொண்டு கதையை இழுக்கிறார்கள். அஞ்சனாவும் சித்தார்த்தும் காதலிக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தும் குணசேகரன் திருமண ஏற்பாடுகளில் மும்மரம் காட்டுகிறார். இதற்கு எல்லாம் அசைந்து கொடுப்பாரா என்ன குணசேகரன்?
நீதிபதியிடம் ஈஸ்வரி சொன்னதை வைத்து குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? குணசேகரன் சொத்தை அபகரிக்க உமையாள் போடும் சதி திட்டம் தான் இந்த திருமணமா? எதிர்நீச்சல் (Ethirneechal) கதைக்களம் எதை நோக்கி பயணிக்கிறது என்பது புரியாமல் குழம்பியுள்ளனர். இந்த கதைக்களம் ஒரு சிலருக்கு விருப்பமாக இருந்தாலும் பெரும்பாலான சின்னத்திரை ரசிகர்கள் பழைய விறுவிறுப்பு இல்லையே என விமர்சனம் செய்து வருகிறார்கள்.