மேலும் அறிய

Ethirneechal: அரிவாளுடன் பொங்கி எழுந்த விசாலாட்சி: குணசேகரன் தலையில் அடுத்தடுத்து விழும் இடி- எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal : குணசேகரனை எதிர்த்துப் பேசி கதிர் கெத்து காட்ட, அதை சற்று எதிர்பார்க்காத குணசேகரன் அதிர்ச்சியில் உறைகிறார். விசாலாட்சி அம்மா அரிவாளை தூக்கும் அளவுக்கு என்ன நடந்தது? தொடரும் பரபரப்பு. 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சமீப காலமாக சூடுபிடித்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட் வைப்பதில் எதிர்நீச்சல் தொடரை மிஞ்ச வேறு எந்த ஒரு சீரியலாலும் முடியாது.

கடந்த வாரத்தில் ஜனனியின் அம்மா பார்வதியை நிர்க்கதியாக விட்டுவிட்டு நாச்சியப்பன் தன்னுடைய குடும்பத்துடன் போய் சேர்ந்து விட, பிரச்சினை பயங்கரமாக வெடித்தது. மறுபக்கம் தர்ஷினி ஜூடோ பயிற்சி போவதைப் பற்றி கரிகாலன் குணசேகரனிடம் வத்தி வைக்க, அவர் தர்ஷினியின் கோச்சுக்கு போன் செய்து தாறுமாறாகப் பேச, அவர் தர்ஷினிக்கு இனி பயிற்சி கொடுக்க முடியாது என சொல்லி விடுகிறார். தன்னுடைய கனவை குணசேகர அழித்துவிட்டதை நினைத்து மனம் நொந்துபோன தர்ஷினி, பள்ளியில் இருந்து சோகமாக சென்று கொண்டிருக்கும்போது, அவளை சில மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று விடுகிறார்கள்.

Ethirneechal: அரிவாளுடன் பொங்கி எழுந்த விசாலாட்சி: குணசேகரன் தலையில் அடுத்தடுத்து விழும் இடி- எதிர்நீச்சலில் இன்று!க்

தர்ஷினியை காணவில்லை என குணசேகரன் வீடே பதட்டத்தில் இருக்கிறது. ஈஸ்வரி மகளைக் காணவில்லை என கதறி துடிக்கிறாள். ஆனால் குணசேகரனோ ஈஸ்வரி தான் தர்ஷினியை யாரோடோ ஓட வைத்துவிட்டாள் என வாய்க்கு வந்தது போல பேசுகிறார். போலீஸ் வந்து ஜான்சியையும், கரிகாலனையும் தர்ஷினியின் கடத்தலில் சந்தேகப்பட்டு அழைத்து சென்று அடிதடியுடன் விசாரணை செய்கிறார்கள்.

குணசேகரன் வந்து அவர்களை ஜாமீனில் எடுக்கிறார். அப்போது குணசேகரன் மீண்டும் கரிகாலனிடம் தர்ஷினி உனக்கு தான் என சொல்ல டென்ஷனான கதிர் குணசேகரனை எதிர்த்து பேச அவர் அதிர்ச்சி அடைகிறார். இது தான் கடந்த வார எதிர்நீச்சலின் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கரிகாலன் பேசியதைக் கேட்டு கடுப்பான கதிர் கரிகாலனை ஓங்கி கன்னத்தில் அறைந்து விடுகிறான். அதைப் பார்த்த குணசேகரன், "கரிகாலன் சொன்ன கருத்து தான் என்னுடையதும். அப்பா என்னையும் அடிப்பியா?" என ஆவேசத்துடன் கேட்க "ஒன்னு நீ மாறு இல்லனா என்ன மாற விடுயா" என கதிர் கோபத்தில் சொல்ல குணசேகரனுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அருகில் இருந்த ஞானத்திற்கும் கதிர் பேசியது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

Ethirneechal: அரிவாளுடன் பொங்கி எழுந்த விசாலாட்சி: குணசேகரன் தலையில் அடுத்தடுத்து விழும் இடி- எதிர்நீச்சலில் இன்று!
ஈஸ்வரியும் மற்ற பெண்களும் சேர்ந்து ஜீவானந்தம் வீட்டுக்குச் சென்று அவரின் உதவியுடன் தர்ஷினியை தேடலாம் என செல்கிறார்கள். ஆனால் ஜீவானந்தம் வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று இருப்பதாக ஃபர்ஹானா சொல்லி ஏதாவது பிரச்சினையா எனக் கேட்கிறாள்.

வீட்டுக்கு வந்த குணசேகரனிடம் அரிவாளுடன் ஆவேசமாக வந்த விசாலாட்சி அம்மா "பெரியவனே... போதும்யா இனி அவளுங்க நமக்கு தேவை இல்லை" என்கிறார். அதைப் பார்த்த குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.  

மீண்டும் ஜீவானந்தம் என்ட்ரி இருக்க போகிறது என்பது எதிர்நீச்சல் (Ethirneechal) ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே போல கதிரின் இந்த திடீர் மாற்றங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தர்ஷினியை யார் கடத்தியது என்பது ஒரே கேள்விக்குறியாக இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் அதற்கான விடை கிடைக்கும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget