Karthigai Deepam: ரேவதிக்கு நலங்கு வைக்க வந்த கார்த்திக்? ஷாக்கில் சாமுண்டீஸ்வரி!
karthigai deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமியாடி, உன் பொண்ணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ஆனா நீ நினைச்சது நடக்காது என குறி சொன்ன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கூட்டுச் சதி:
அதாவது, கருப்பசாமி சொன்ன குறியால் சாமுண்டீஸ்வரி சிந்தனையில் இருக்க, உள்ளே வந்த சந்திரகலா நீங்க கவலைப்படாதீங்க அக்கா அதான் ரேவதி கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு சொல்லி இருக்காங்களே என்று ஆறுதல் படுத்துகிறாள்.
அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி மற்றும் மாயா என மூவரும் கூட்டு சேர்ந்து அந்த டிரைவர் மற்றும் மயில் வாகனத்திடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என பேசிக் கொள்கின்றனர்.
நலங்கு வைக்கச் சொல்லும் கார்த்திக்:
இதனைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க வீட்டுக்கு வருகின்றனர். அப்போது கோவிலில் நடந்த விஷயத்தையும், நாளைக்கு ரேவதிக்கு நலங்கு வைக்கிறார்கள் என்ற விஷயத்தை சொல்ல, முறை பையனா நீ தான் நலங்கு வைக்கணும் என பாட்டி பரமேஸ்வரி சொல்கிறார்.
கார்த்திக் அது எப்படி முடியும்? அப்படி பண்ண தப்பாகிடும் என்று சொல்ல, பரமேஸ்வரி பாட்டி கொஞ்ச நகைகளை கொடுத்து முறை பையனா நீ தான் முறை எனும் என்று கண்டிஷன் போடுகிறார். மேலும் மயில்வாகனத்திடம் நாங்க தான் நேர்ல வர முடியாது எங்களுக்கு வீடியோ கால்ல அங்கு நடக்கிறது காட்டு என சொல்கிறார்.
மயில்வாகனம் சொன்ன காரணம்:
அடுத்த நாள் ரேவதிக்கு நலங்கு வைக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்க ரேவதி தயாராகி வெளியே வர தாய்மாமன் தான் நலங்கு வச்சு தொடங்கி வைக்கணும்.. யாராவது இருக்கிறார்களா? என உறவினர்கள் கேட்க மயில் வாகனம், இருக்கிறார்களே நம்ப டிரைவர் இருக்காரு என்று சொல்ல எல்லோரும் குழப்பம் அடைகின்றனர்.
டிரைவர் சாமுண்டீஸ்வரி அத்தைக்கு தம்பி மாதிரி அப்போ ரேவதிக்கு மாமா முறை தானே என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

