Baakiyalakshmi August 28 episode: கழட்டிவிட்டு கோபி... கடுப்பான இனியா செய்த காரியம்... பாக்கியலட்சுமியில் இன்று
* இனியாவுக்கு ஷாக் கொடுத்த கோபி * செழியனும் எழிலும் கைவிரித்ததால் அப்செட்டான இனியா பாக்கியலட்சுமியில் இன்று என்ன நடக்கிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் முந்தைய எபிசோடில் மயூ பெரிய மனுஷியானதால் அவளுக்கு நாளை பங்க்ஷன் செய்து விடலாம் என ராதிகாவும் அவளின் அம்மாவும் முடிவு செய்கிறார்கள். கோபி இனியாவை ப்ராஜெக்ட் விஷயமாக கேரளா ட்ரிப் அழைத்து போகிறேன் என சொன்னதால் கடுப்பான ராதிகா நீங்க எப்படி போறீங்க என பார்க்கலாம் என சண்டை போடுகிறாள். அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது என புரியாமல் குழப்பத்தில் புலம்பும் கோபி சரி இனியாவை சமாதானம் செய்து பார்க்கலாம் என இனியாவிடம் பேசுகிறார். "இந்த ட்ரிப் இப்போ போக முடியாத சிட்டுவேஷன். கேன்சல் பண்ண வேண்டாம் போஸ்ட் போன் பண்ணலாம்" என சொல்லி வரமுடியாத சூழலுக்கான காரணத்தையும் சொல்கிறார். "முடியாது டாடி நான் ஒன்னும் ஜாலியாக உங்களை ட்ரிப் கூப்பிடல. காலேஜ் ப்ராஜெக்ட்டுக்காக தான் கூப்பிடுறேன். உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லை" என்கிறாள் இனியா.
"நான் வேணுன்னா செழியனை கூட்டிட்டு போக சொல்றேன்" என சொல்லி இனியாவை சமாதானம் செய்து வைக்கிறார் கோபி. இந்த விஷயத்தை பத்தி கோபி ராதிகாவிடம் சென்று சொன்னால் அவள் பெருசா ஒரு ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. செழியன் மாலினியுடன் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான். கோபி செழியனுக்கு போன் செய்து இனியாவை கூட்டிட்டு போக சொல்கிறார். செழியன் என்னால் முடியாது எனக்கு முக்கியமான வேலை இருக்கு என சொல்லி ஒதுங்கி விடுகிறான். அதை கோபி இனியாவுக்கு போன் செய்து சொல்லவும் இனியா கடுப்பாகி விடுகிறாள்.
அனைவரும் சாப்பிட உட்காரும் போது இனியா கோபி சொன்ன விஷயத்தை பற்றி சொல்லி நாளைக்கு கேரளா போக முடியாது என கோபி சொன்னதை பற்றி இனியா கூறியதும் கோபப்பட்டு கோபியை திட்டுகிறார் ஈஸ்வரி. எழில் அந்த நேரத்தில் வந்து தனக்கு ஒரு புது ப்ராஜெக்ட் கிடைத்து இருப்பதாகவும் அதற்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதாகவும் சொல்கிறான். இனியா எழிலிடம் ட்ரிப் கூட்டிட்டு போக முடியுமா என கேட்கவும் ஷூட்டிங்கை போஸ்ட்போன் பண்ண முடியுமா என கேட்டு பார்க்கிறேன் என எழில் சொல்கிறான். ஷூட்டிங் முடிச்சுட்டு போக முடியுமா என எழில் இனியாவிடம் கேட்க அதெல்லாம் முடியாது என கோபமாக சொல்ல அனைவரும் அவளை சமாதானம் செய்கிறார்கள்.
பாக்கியா எழிலிடம் இனியாவை எப்படியாவது காலேஜ் ப்ராஜெக்ட்காக ட்ரிப்புக்கு அனுப்ப வேண்டும் என சொல்கிறாள். நான் செழியனிடம் பேசிப் பார்க்கிறேன் என பாக்யா சொல்லி செழியனுக்கு கால் செய்கிறாள்.
செழியன் எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது அதனால் அவளை ட்ரிப்பை கேன்சல் செய்ய சொல்லுங்கள் என சொல்லி விடுகிறான். இதனால் பாக்கியா மிகவும் குழப்பமாக இருக்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.