Anna Serial: இசக்கி விஷயத்தில் பாக்கியம் எடுத்த முடிவு: சண்முகத்துக்கு ஏறிய டென்ஷன்: அண்ணா சீரியல் இன்று!
“ஷண்முகம் வீட்டிற்கு வந்தா இசக்கி ஞாபகமாவே இருக்கு, நான் வரல” என்று சொல்ல, ”அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு, வா அண்ணே” என்று கூப்பிட்டும் ஷண்முகம் வர மறுக்கிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கண்ணீருடன் புலம்ப. அதை சிவபாலன் கேட்டு பீல் செய்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது ஷண்முகம் வீட்டிற்கு வராமல் ஓரிடத்தில் புலம்பிக் கொண்டிருக்க, வெட்டுக்கிளி அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைக்க, “ஷண்முகம் வீட்டிற்கு வந்தா இசக்கி ஞாபகமாவே இருக்கு, நான் வரல” என்று சொல்ல, ”அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு, வா அண்ணே” என்று கூப்பிட்டும் ஷண்முகம் வர மறுக்கிறான்.
மறுபக்கம் பாக்கியத்துக்கு கை கால் வலியாக இருக்க, வீட்டிற்கு உருவி விட வந்த பாட்டி, “கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு, அடுத்து என்ன?” என்று கேட்க, பாக்கியம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இருப்பதாக சொல்கிறாள். பாட்டி “நீ மட்டும் உன் புருஷனை விரும்பியா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த? ஆனால் அவன் கூட சேர்ந்து வாழலையா? அதே மாதிரி தான் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணு, அவங்களும் நல்லபடியா சேர்ந்து வாழ்வாங்க” என்று சொல்கிறாள்.
இதனைத் தொடர்ந்து பாக்கியம் ஜோசியரை சந்தித்து நாள் குறித்து கொடுக்க சொல்லிக் கேட்க, “இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு” என்று சொல்கிறார். “பையனுக்கு மட்டும் நாள் குறிக்க வந்திருக்கீங்க, பொண்ணுக்கு வேற ஜோசியரைப் பார்த்து நாள் குறிச்சிடீங்களா?” என்று கேட்க, பாக்கியம் “அவங்களுக்கு பிடிக்காமல் கல்யாணம் நடந்ததால் இன்னும் எதுவும் நடக்கல” என்று சொல்ல ஜோசியர் அவங்களுக்கும் நாள் குறித்து கொடுத்து அனுப்புகிறார்.
பாக்கியம் பரணியை வரவைத்து முத்துப்பாண்டி - இசக்கி சாந்திமுகூர்த்தம் குறித்து சொல்ல, பரணி பிடித்து திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இங்க இசக்கி பரணியைப் பார்த்ததும் “அண்ணன் ஏதாவது சொல்லுச்சா?” என்று விசாரிக்க, பரணி எதுவும் சொல்லல என்று சொல்கிறாள். ஜோசியர் சண்முகத்தை பார்க்க பரணியும் பாக்கியமும் சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க வந்ததாக சொல்ல, பரணியை தப்பாகப் புரிந்து கொண்டு கோபமடைகிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Flashback: கன்னத்தில் முத்தமிட்டால் இந்திரா: சிறப்பாக நடித்தும் தேசிய விருதை மிஸ் செய்த சிம்ரன்! இப்படி ஒரு காரணமா!
Thalapathy: பாட்டுல கூட அரசியலா? - விஜய் பட பிரச்னையால் கோபப்பட்ட விஜய் ஆண்டனி