Tamannaah Bhatia: ‘லக்கா மாட்டிக்கிச்சு..’ காதலர் விஜய்யுடன் வசமாக கேமராவில் சிக்கிய தமன்னா..!
Tamanna Bhatia: பிரபல நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளங்கள் முழுவதும் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழி பட ரசிகர்களுக்கும் மிகவும் தெரிந்த முகமாக இருக்கும் நடிகை, தமன்னா. நெடுநாட்களாக சிங்கிள் ஸ்டேடசில் இருந்த இவர், இப்போது தனக்கான காதலரை தேர்ந்தெடுத்து விட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகருடன் காதலா?
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியான நாயகியாக வலம் வந்த தமன்னா, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பப்ளி பவுன்சர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் பிரபல தொடரான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற ஆந்தாலஜி (Anthology) தொடரின் இரண்டாவது சீசனில் தமன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து நடிகைகள் கஜோல், மிருணாள் தாகூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன்னாவுடன் சேர்ந்து, விஜய் வர்மா என்ற பாலிவுட் நடிகரும் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடித்துள்ளார். இவரும் தமன்னாவும் லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
கேமராவில் சிக்கிய தமன்னா!
பாலிவுட்டின் கிசுகிசு பக்கங்களில், இன்றைய தலைப்பாக தமன்னாவும் விஜய் வர்மாவும்தான் உள்ளனர். இவர்களின் காதல் குறித்த தகவல்கள் அவ்வப்போது சத்தமில்லாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து, விஜய்யும் தமன்னாவும் நேற்று இரவு டின்னருக்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அவர்களை சிலர் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளளனர். அதில், தமன்னா மற்றும் விஜய் காரில் ஏறி செல்கின்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
View this post on Instagram
காதல் வதந்திகளை மறுத்த தமன்னா:
கோவாவில் நடைப்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமன்னாவும் விஜய் வர்மாவும் முத்தம் கொடுத்துக் கொண்டது போன்ற வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அதில் அவர்களின் முகங்கள் சரியாக தெரியாததால் இதுகுறித்து இருவரிடமும் கேள்விகள் எதுவும் எழுப்பப்படாமல் இருந்தன.
இதையடுத்து, கடந்த மாதம் தமன்னாவிடம் விஜய் மீதான காதல் வதந்தி குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளோம். இவ்வாறு வெளிவரும் வதந்திகளை பிறருக்கு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தவிர எனக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை..” என தாமரை இலையில் நீர் போல பட்டும் படாமல் காதல் வதந்திகளை தமன்னா மறுத்துவிட்டார்.
தமன்னாவிற்கு செல்லப்பெயர்:
பிரபலங்கள் பலர் இன்ஸ்டாகிராமில் ‘Ask Me Anything’ என்ற ஸ்டிக்கரின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம். இதையடுத்து, நடிகர் விஜய் வர்மாவும் இது போன்று ரசிகர்களின் கேள்விகளுக்கு ஒருமுறை பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் “உங்களுக்கு ‘Tamtar’ பிடிக்குமா..?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் “எனக்கு Tamtar என்றால் மிகவும் பிடிக்கும்” என பதிலளித்தார். Tamtar என்பது விஜய், தமன்னாவிற்கு கொடுத்திற்க்கும் செல்லப்பெயர் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், தமன்னா-விஜய் ஒன்றாக உள்ள வீடியோ வெளியானதால் இவர்களுக்கிடையேயான காதல் கிசு கிசு உண்மையானதாக இருக்குமோ என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

