விஜய் பட நடிகைக்கு இரண்டாவது குழந்தை.. எல்லையில்லா மகிழ்ச்சியில் குதூகலம்.. வெளியான புகைப்படம்
நண்பன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை இலியானாவிற்கு இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான். குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து இலியானா மனம் நெகிழ்ந்துள்ளார்.

நடிகை இலியானா கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு, பாலிவுட், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். பிறகு 2012ல் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது. பாலிவுட் படங்களில் நடித்து வந்த அவர் சினிமாவை விட்டு விலகினார். பிறகு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். பின்னர், நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார்.
முதல் குழந்தை பிறப்பு
தனது கணவர் யார் என்பதை மறைத்து வந்த நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் தான் தனது கணவர் என்றும், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார்ய
சர்ச்சையான கருத்து
சமீபத்தில் திருமணம் குறித்தும் சினிமா பயணங்கள் குறித்து பேட்டி அளித்த இலியானா ஆணுறை குறித்து பேசியது சர்ச்சையானது. அந்த பேட்டியில், ஆணுறை உபயோகிப்பது பால்வினை நோய்கலை தடுக்கவும் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும் தான் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும்போது ஆணுறை பாக்கெட்டுகள் கிழியாமல் ஓட்டை இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டியது நமது கடமை. ஏனென்றால் தயாரிப்பின் போது ஏற்படும் சில தவறுகள் பாக்கெட்டுகள் கிழிந்தோ அல்லது ஓட்டையாக இருக்கவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை அணியும் முன் அதை கவனிக்க வேணும் என்பது பாதுகாப்பான வழி என்று இலியானா தெரிவித்திருந்தார். அவர் கூறுவது நல்ல கருத்தாக இருந்தாலும் சமூகவலைதளத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
இலியானாவுக்கு இரண்டாவது குழந்தை
அண்மையில் தனது முதல் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இலியானா, தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி அவருக்கு இரண்டாவது மகன் பிறந்த நிலையில், தற்போது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வா மகனே இவன் மூலம் எங்களது இதயம் நிறைந்துவிட்டது என்றும் தனது 2வது மகனுக்கு கீனு ரபி டோலன் என பெயர் சூட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





















