கிருஷ்ணாவை பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீகாந்த்.. எஸ்கேப் ஆன அருண் விஜய்.. போலீஸ் வலையில் சிக்கும் அடுத்த நடிகர்?
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியிருப்பதால் சினிமா துறையில் அடுத்து எந்த பிரபலம் சிக்கப்போகிறார் என்ற பரபரப்பும் அதிகரித்திருக்கிறது. சமூகவலைதளங்களில் 3 எழுத்து கொண்ட நடிகர் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசு்கப்படுகிறது.
சிறையில் இருக்கும் கிருஷ்ணா
விலை உயர்ந்த கொகைன் பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் 6 முறை ஆஞ்சியோ செய்திருப்பதாகவும், இதயக்கோளாறு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனை ஆராய்ந்ததில் வாட்ஸ் அப் குழுவில் பாேதை பொருள் குறித்து பேசியிருப்பதும், அதற்கென்று தனு நண்பர்களை உருவாக்கியதும் தெரியவந்தது. இதனால், அவர் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் தனியாக அடைக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீகாந்த் வேதனை
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்திற்கு தினமும் காலையில் செய்தித்தாள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில், கிருஷ்ணா கைது செய்யப்பட்டதை அறிந்துகொண்ட அவர் போலீசாரிடம் அவர் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என கேட்டுள்ளார். மேலும், நான் கிருஷ்ணாவை பார்க்க வேண்டும் என்றும் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு போலீசார் பார்க்க மறுத்துள்ளனர். அண்மையில் நடிகர் கிருஷ்ணா 2வது திருமணம் முடிந்தது. இந்த சூழலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை தந்திருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
எஸ்கேப் ஆன அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் 2012ல் வெளியான தடையற தாக்க திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அருண் விஜய் கரியரில் மிக முக்கிய படமாகவும் இருந்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் தற்போது மீண்டும் ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் விஜய்யிடம் போதை பொருள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நோ கமெண்ட்ஸ், நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்கு தான் வந்திருக்கிறேன்" என கூறிவிட்டு பதிலளிக்காமல் சென்றார்.
100 வருடமாக இருக்கிறது
அதேபான்று நடிகர் விஜய் ஆண்டனியும் போதைப்பொருள் பயன்படுத்துவது தவறு. நடிகர்கள் மட்டும் பயன்படுத்துவது இல்லை. எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். நூறு வருடமாக இருக்கத்தான் செய்கிறது. சினிமா துறையில் மட்டும் இருப்பதாக கூற முடியாது என தெரிவித்தார். அதேபோன்று இயக்குநர் மாரி செல்வராஜூவும் போதைப்பொருள் பயன்படுத்துவது தவறு என தெரிவித்திருந்தார். மேலும், இதில், பல நடிகர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படும் நிலையில், 3 எழுத்தில் பெயர் கொண்ட நடிகர் தான் சிக்குவார் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அவரது பெயரை அதிகம் சமூகவலைதளங்களில் திட்டமிட்டு பரப்புவதாகவும் அவரது ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.





















