'சித்தப்பாவுடன் விளையாடும் செல்வராகவன் மகன்' தனுஷ் இன்ஸ்டா போட்டோ வைரல்!
தனது அண்ணன் மகனுடன் தனுஷ் விளையாடும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
!['சித்தப்பாவுடன் விளையாடும் செல்வராகவன் மகன்' தனுஷ் இன்ஸ்டா போட்டோ வைரல்! Son of Selvaragavan playing with actor Dhanush 'சித்தப்பாவுடன் விளையாடும் செல்வராகவன் மகன்' தனுஷ் இன்ஸ்டா போட்டோ வைரல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/e38c8b53d3b8da5dfbe715f8001ecd80_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில், 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலும் தனுஷின் எதார்த்தமான நடிப்புக்கு அடுத்த தேசிய விருது கிடைக்கும் என பல திரைப்பட விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
அவர் தன் அண்ணன் இயக்குனர செல்வராகவனின் மகனுடன் விளையாடுவதை படம் பிடித்து செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் அவரது இன்ஸடாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த க்யூட்டான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அண்ணன் செல்வராகவன் இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடித்துக்கொண்டுதான் உள்ளார். செல்வராகவனுடன் இணையும் திரைப்படத்திற்கு 'நானே வருவேன்' என்று தலைப்பிட்டுள்ளனர். தனுஷ், செல்வராகவன் இருவரும் இணையும் படங்கள் ஒவ்வொன்றும் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால் “நானே வருவேன் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் இருக்கிறது. நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜாவை கமீட் செய்ய அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல், நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தனுஷ். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படப்பிடிப்பை முடிந்து கொடுத்துவிட்டு, சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடித்து வந்த மாறன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார். அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதில் ஒரு திரைப்படமாக தற்போது 'திருச்சிற்றபலம்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதை முடித்த பின்னர் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுத்திகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)