இரவிற்கு இன்பம் சேர்க்கும் பி.சுசீலாவின் ப்ளே லிஸ்ட் !
இரவு பொழுதில் நாம் கேட்க வேண்டிய பி.சுசீலாவின் பாடல்கள் என்னென்ன?
தமிழ் திரையுலகளில் சிறப்பான பாடல்களை பாடி அசத்தியவர்களில் ஒருவர் பி.சுசீலா. இவர் ஆந்திராவில் பிறந்திருந்தாலும் பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார். கிட்டதட்ட 50 ஆயிரம் திரை இசை பாடல்களுக்கு மேல் பாடி சாதனைப் படைத்துள்ளார். 1952 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் இவர் பாடல்களை பாடி வருகிறார். இந்தச் சூழலில் பி.சுசீலாவின் குரலில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. நாளை இந்த வேளை பார்த்து:
உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலவின் குரலில் இந்தப் பாடல் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்காக முதல் தேசிய விருதும் சுசீலாவிற்கு கிடைத்தது.
"பெண்மையே
உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான்
கலைஞன் ஆகினான்
நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா..."
2. நலம் தானா:
கே.வி.மகாதேவன் இசையில் தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. பி.சுசீலாவின் குரலில் சிவாஜி-பத்மினியின் நடிப்பில் சிறப்பாக அமைந்த பாடல் இது.
"நலம் பெற
வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில்
நினைவுண்டு
இலை மறை
காய் போல் பொருள்
கொண்டு எவரும்
அறியாமல் சொல்
இன்று..."
3. பேசக் கூடாது:
ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அடுத்த வாரிசு. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். பி சுசீலாவின் குரல் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கும்.
"பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
இடையோடு கனி ஆட..."
4. முத்துமணி மாலை:
விஜய்காந்த்-சுகன்யா நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எஸ்பிபி மற்றும் பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பார்கள். இசைஞானி இளையராஜா இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பார்.
"என்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
வெட்கத்துல
சேலைகொஞ்சம்
விட்டுவிட்டுப் போராட
காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே"
5. கற்பூர பொம்மை ஒன்று:
கேளடி கண்மனி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. எஸ்பிபி மற்றும் கீதா நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் இந்தப் பாடலை பி.சுசீலா பாடியிருப்பார்.
"தாய் அன்பிற்கு
ஈடேதம்மா ஆகாயம்
கூட அது போதாது
தாய் போல் யார்
வந்தாலுமே உன் தாயை
போலே அது ஆகாது
என் மூச்சில்
வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும்
செந்தேன் குழல் முத்தே
என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா.."
இவை தவிர தமிழ் சினிமாவில் பல எண்ணற்ற பாடல்களுக்கு இவர் பாடி வெற்றி பாடல்களாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அண்ணாத்த ஸ்பெஷல்: இரவு நேரத்தை அழகாக்கும் ரஜினி பாடல்கள் !