அண்ணாத்த ஸ்பெஷல்: இரவு நேரத்தை அழகாக்கும் ரஜினி பாடல்கள் !
ரஜினியின் அண்ணாத்தா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் இன்று இரவு உங்களை இனிமையாக்கும் ரஜினி ஹிட்ஸ் இதோ...
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் அண்ணாத்த வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகும் தேதி வெளியானதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் நடித்த சிறப்பான மெல்லிசை பாடல்கள் என்னென்ன?
1. மீனம்மா மீனம்மா:
ரஜினிகாந்த் , ராதா நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். இந்தப் பாடல் மற்றும் அதன் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
"மந்திரங்கள் காதில்
சொல்லும் இந்திரனின்
ஜாலமோ சந்திரர்கள்
சூரியர்கள் போவதென்ன
மாயமோ..."
2. கொஞ்சி கொஞ்சி அலைகள்:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வீரா திரைப்படத்தில் எஸ்பிபி குரலில் இளையராஜாவின் இசையில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலின் வரிகள் மற்றும் எஸ்பிபியின் குரல் பாடலை பல முறை கேட்க தூண்டும் வகையில் அமைந்திருக்கும்.
"அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட..."
3. பேசக் கூடாது:
ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அடுத்த வாரிசு. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார்.
"பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
இடையோடு கனி ஆட..."
4. சந்தைக்கு வந்த கிளி:
ரஜினிகாந்த், கௌதமி நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இப்பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா
ஒண்ணு நான் சொல்லவா
சொல்லவா சொல்லவா
ஒண்ணு நான் சொல்லவா..."
5. தென்மதுரை வைகை நதி:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் இந்தப் பாடல் உள்ளது. இதுவும் இளையராஜா-ரஜினியின் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாட்லகளில் ஒன்று. இதில் ரஜினிகாந்த் மற்றும் பிரபு சிறப்பாக நடித்திருப்பார்கள். இளையராஜாவின் இசை சிறப்பாக அமைந்திருக்கும்.
"தம்பி உந்தன்
உள்ளம் தானே அண்ணன்
என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற
நியாயம் இல்லை.."
இவை தவிர பல வெற்றி பாடல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ளது. அவற்றை அடுக்க ஒரு நாள் போதாது.
மேலும் படிக்க: இரவை இசையருவி எஸ்.ஏ.ராஜ்குமாரிடம் ஒப்படைத்து இந்த பாடல்களை கேளுங்களேன்!