சிம்புவை திருமணம் செய்ய போகிறேன்?.. சிறகடிக்க ஆசை மீனா வெளியிட்ட வீடியோ!
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா சிம்புவை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்தி படு வைரலாகி வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மீனா கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றுள்ளவர் கோமதி பிரியா. மதுரையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாள சீரியல்களில் கொடி கட்டி பறக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து - மீனா ஜோடி மக்களுக்கு பிடித்த இணையராக இருக்கின்றனர். விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கையும் எகிற செய்வது இந்த சீரியல் தான். இந்நிலையில், நடிகே கோமதி பிரியாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வயதை தெரிவித்த கோமதி பிரியா
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு பிஸியான நடிகையாக உலா வரும் கோமதி பிரியா அண்மையில் தெலுங்கில் புதிதாக தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழை போன்று தெலுங்கிலும் பிரபலமான சீரியல் நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில், யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் உங்களது வயது என்ன என கேட்டுள்ளனர், அதற்கு அவர், 08.02.1996 என கூறியுள்ளார். நடிகைகள் என்றாலே தங்களது வயதை சொல்ல தயங்குவார்கள். இப்போது உங்களது வயது தெரிந்துவிட்டது பரவால்லையா என தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கோமதி பிரியா, எப்போதும் இளமையாக இருக்க முடியாது. வயது ஆக தானே செய்யும். இயற்கையை மாற்ற முடியுமா என பதில் அளித்தார்.
சிறகடிக்க ஆசை நடிகைக்கு திருமணமா?
மலையாள சீரியல்களில் நடித்து வரும் அவர், மேரேஜ், விரைவில் குட் நியூஸ், உண்மையான காதல், பேரன்பு என சமூகவலைதளத்தில் திருமணத்திற்கான அனைத்து டாக் லைனையும் பயன்படுத்தியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் எப்போது திருமணம் என கேள்வி கேட்க தொடங்கினர். இந்நிலையில், மலையாள நடிகர் ஒருவரை அவர் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. நடிகை கோமதி பிரியாவுடன் இருக்கும் நடிகரின் புகைப்படமும் வைரலானது. இந்நிலையில், கோமதி பிரியா வெளியிட்டிருக்கும் புதியே வீடியோவால் பிரபல நடிகரின் பெயரும் அடிபட தொடங்கியிருக்கிறது,
சிம்புவுடன் திருமணம்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு 42 வயதாகியும் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். இந்நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியாவை சிம்பு திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் கோமதி பிரியா வெளியிட்ட வீடியோதான் என கிசுகிசுக்கப்படுகிறது. அந்த வீடியோவில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெர்சி நான் ரெடி ஆகிடுச்சு, கார்த்திக்கை தான் காணோம். எனக்கேத்த கார்த்தி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. என்னை தேடி வந்திடுங்க என ஜாலியாக கோமதி பிரியா வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது. இதனால், நடிகர் சிம்புவை கோமதி திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதுவரை இருவரிடம் இருந்தும் மறுப்பு செய்திகள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















