மேலும் அறிய

Pradeep Kumar: மாயநதி இங்கு.... தலைக்கோதும் இளங்காத்து... மாயக்குரலுக்கு சொந்தக்காரர் பிரதீப் குமார்...!

இன்று பாடகர் மற்றும் இசையமைபாளர் பிரதீப் குமாரின் பிறந்தநாள். பிரதீப் குமாரின் சில தொடக்ககாலப் பாடல்களைப் பார்ப்போம்

பாடகர், இசையமைப்பளரான பிரதீப் குமார் தனது 37வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 

 எல்லாருக்கும் ஒரு ரகசியப் பாடல் இருக்கும். எல்லாருக்கும் ஒரு ரகசிய இசையமைப்பாளர். அதேபோல் எல்லாருக்கும் ஒரு ரகசியப் பாடகர் இருப்பார். இன்று அனைவராலும் அனைவருக்கும் சொந்தமான பிரதீப் குமார் ஒருகாலத்தில் நிறைய பேருக்கு ரகசியப் பாடகராக இருந்திருக்கிறார். முதல் முறையிலேயே சில பாடல்கள் நம் மனதில் இனம் புரியாத ஒரு உணர்வை ஏற்படுத்தும் இல்லையா. அந்தப் பாடல் பிடிக்கிறதா இல்லையா என்றுகூட நமக்கு அப்போது சொல்லத் தெரியாது. பிரதீப் குமார் என்கிறப் பெயர் பிரபலமாவதற்கு முன்பே அவர் பாடல்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. அந்தமாதிரியான பாடல்களின் ஒரு சின்ன பட்டியல்.

ஆசை ஒரு புல்வேளி (அட்டக்கத்தி)

2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ஆசை ஒரு புல்வேளி பாடல் இன்று நம் அனைவரின் ஆல் டைம் ஃபேவரேட் பாடலாக இருக்கிறது. ஆனால இந்தப் பாடல் வெளியான சமயத்தில் பிரதீப் குமார் என்கிற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. காதல் உணர்வு ஒருவருக்கு ஏற்படும்போது அவர் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் என்று சொல்கிறோம் இல்லையா. இந்த பட்டாம்பூச்சிகள் நம்மை எத்தனை அலைகளிக்கச் செய்கின்றன. கால் ஓரிடத்தின் நிற்க முடியாமல் மூச்சின் வேகம் கூடி தவித்து நிற்கிறோம். கிட்டதட்ட இந்த மாதிரியான ஒரு காதல் அரும்பும் தருணத்தில் தினேஷ் நிற்கும்போது காதலை ஒரு தியானம் போல் நிதானமாக உணரவைக்கும் பிரதீப் குமாரின் குரல். அதே அட்டகத்தி படத்தில் சொற்ப நேரம் வந்துவிட்டுப் போகும்  வழி பார்த்திருப்பேன் பாடலையும் பிரதீப் பாடியிருப்பார்.

கோடையில மழபோல

குக்கூ படத்தின் இடம்பெறும் கோடையில மழபோல் போல பாடலில் முன்னணியில் வைகம் விஜயலக்‌ஷ்மி பாடியிருப்பார். ஆனால் இடையில்

”உருவெது வடிவெதுவோ கொண்ட உறவுகள் உனர்ந்துத் தொட

இருள் எது ஒளி எதுவோ இரண்டு இருதயம் கலந்துவிட”

என்று வெறும் இரண்டு வரிகளை மட்டுமே பாடிவிட்டுப் போகும் பிரதீப்பின் குரலுக்காக மட்டுமே இந்தப் பாட்டை ரிபீட்டில் கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

மோகத்திரை

சந்தோஷ் நாராயணன் தனது இசையில் பிரதீப் குமாரைத் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தார்.

பீட்சா படத்தில் மோகத்திரைப் பாடல் அதுவரை இருந்த காதல் பாடல்களில் வெளிபட்ட குரல்களை விட தனித்துவமான ஒரு குரலாக பிரதீப்  குமாரை அடையாளம் காட்டியது என்று சொல்லலாம்

ஆகாயம் தீப்பிடிச்சா (மெட்ராஸ்)

பிரதீப் வேவ் என்கிற ஒன்று தொடங்கியது இந்தப் பாடலில் இருந்து சொல்லலாம். அனைவரின் வாயிலிருந்தும் ஒரே பெயர் தான் உச்சரிக்கப் பட்டது. யார் இந்த பிரதீப் குமார் என்று கூகுளில் மக்கள் தேடத் தொடங்கினார்கள். அதற்கு அடுத்து நடந்தது எல்லாம் வரலாறு…

இன்று பிரதீப் குமார் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒன்றை மிஞ்சக் கூடியவை. இதுதான் சிறந்தது என எதையும் நாம் பிரித்து பார்க்க முடியாது. எத்தனை பாடலாக இருந்தாலும் குரலுக்கு சொந்தமானது ஒரு பெயர்தான். அந்த பெயருக்கு இன்று பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதீப் குமார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யாரு கூத்தாடி? சுக்குநூறாக உடைச்சவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் நறுக்!
யாரு கூத்தாடி? சுக்குநூறாக உடைச்சவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் நறுக்!
கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!
கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரு கூத்தாடி? சுக்குநூறாக உடைச்சவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் நறுக்!
யாரு கூத்தாடி? சுக்குநூறாக உடைச்சவர் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் நறுக்!
கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!
கடும் குளிரிலும் ரோட்டில் படுத்துறங்கும் மக்கள்.. கொதித்த ராகுல் காந்தி.. களத்திற்கே போயிட்டாரு!
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
சட்டமன்றத்தேர்தல்தான்.... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் ஜகா வாங்கிய தவெக!
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Getup சேஞ்ச்.. ரயில் நிலையத்திற்கு எஸ்கேப்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை தட்டி தூக்கிய போலீஸ்
Special Train: சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
Jailer 2 BTS : டூப்புன்னு நெனச்சியா.. ஒரிஜினல் கண்ணா.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜெயிலர் -2 மேக்கிங்
Jailer 2 BTS : டூப்புன்னு நெனச்சியா.. ஒரிஜினல் கண்ணா.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜெயிலர் -2 மேக்கிங்
Erode By electon  : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக..  வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்
Erode By electon : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக.. வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்
லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்
லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்
Embed widget