கோமாதா பூஜை... மாலையும் கழுத்துமாக பரிகாரம் செய்தாரா ஷிவானி?
சின்னத்திரை பிரபலம் ஷிவானி கோவிலில் செய்த காரியம் இதுதான்
இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக உள்ள நடிகை ஷிவானி, இன்று பசுக்களுக்கு பூஜை செய்யும் போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். ஏதேனும் பரிகாரம் காரணமாக இந்த பூஜையை ஷிவானி செய்தாரா என தெரியவில்லை. சமீபத்தில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால், பெயர் தக்க வைக்க முடியாத அல்லது கிடைக்காத சூழல் உள்ளது. இதனால், அந்த குறையை தீர்க்கவே ஷிவானி இந்த பூஜையை செய்தார் என தெரிகிறது.
View this post on Instagram
மாடர்னாக இருந்தாலும், அவ்வப்போது பக்திகரமான போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சனிக்கிழமையில் கோயிலுக்கு சென்ற சிவானி மாலையும் கையுமாக அங்குள்ள பசுக்களுக்கு பூ மாலை அணிவித்து பழம் கொடுத்து பின் வணங்கியுள்ளார். இந்த போட்டோவில் மரகத பச்சை புடவைக்கு ஏற்றவாரு சிவப்பு ரவிக்கை அணிந்த சிவானி பார்ப்பதற்கு தெய்வ அம்சமாக உள்ளார். இதற்கு முன்னர் விநாயகர் சதுர்த்திக்கும் பக்தி பழமாக ஒரு போட்டோவை பதிவிட்டுருந்தார்.
View this post on Instagram
12 ஆம் வகுப்பு முடித்த கையுடன், நடிப்பில் ஆர்வம் கொண்டு சினிமாதான் என் வாழ்க்கை என முடிவெடுத்து படிப்பை கைவிட்டார் சிவானி. பின், 2016-ல் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார். சிவானியின் ப்ளஸ் பாய்ண்டே அவரது தோற்றம்தான், வயதில் சிறுமியாக இருந்தாலும், பார்ப்பதற்கு பெரிய பெண் போல் இருப்பார்.
இதனால், அறிமுகமான நாடகத்தில் துணை நடிகராக நடித்தார். பின், அதே நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின்னர் சரவணன் மீனாட்சி 3 ஆம் பாகத்தில் நெகடீவ் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி சீசன் 1, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். ஜோடி நம்பர் 1 போன்ற ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றார்
பிறகு இன்ஸ்டாவில் ஆர்வம் செலுத்திய இவர், பலரது கவனத்தை ஈர்த்து பிரபலமானார். பிக் பாஸ் 4 வது சீசனிக் பங்கு பெற்று, அங்கும் பல சர்சைகளை கிளப்பி பேசும் பொருளாக மாறினார்.
புகழை அடைந்த சிவானி, விஜய் சேதுபதிக்கு மனைவியாக விக்ரம் படத்தில் நடித்தார். வீட்ல விசேஷம் படத்திலும் துணை கதாப்பத்திரத்தில் நடித்தார். வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இதுபோக விஜய் சேதுபதி 46 படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்