Seetha Raman :அடுத்தடுத்து சீதாவை டார்ச்சர் செய்யும் மகா.. மீரா கொடுத்த ஐடியா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தூங்கி கொண்டிருந்த சீதாவின் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பி கோலம் போட சொல்லி மகா டார்ச்சர் செய்ய தொடங்கிய நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சீதா கோலம் போட மறுக்க நீ கோலம் போடுற வரைக்கும் செக்யூரிட்டிக்கு அடி விழும் என்று சொல்லி அவனை அடிக்க தொடங்க வேறு வழியின்று சீதா கோலம் போடுகிறாள். சமையல்காரி செல்வி இந்த விஷயத்தை மீராவுக்கு தெரியப்படுகிறாள்.
இதனால் அதிர்ச்சி அடையும் மீரா வீட்டிற்கு வந்து சீதாவின் மீது தண்ணீர் ஊற்றிய மூவரையும் லெப் அண்ட் ரைட் வாங்கி அர்ச்சனா, மகாவிடம் சண்டை போடுகிறாள். சீதாவுக்கு ஆறுதல் சொல்லி இந்த விஷயத்தை ராமுக்கு சொல்லி விடலாம் என்று சொல்கிறாள். ஆனால் சீதா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கிறாள்.
View this post on Instagram
மீரா எதுவாக இருந்தாலும் போன் பண்ணு என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பிய பிறகு இரவு சாப்பிடும் போது மீண்டும் சீதாவை டார்ச்சர் செய்து உணவு பரிமாற வைக்கின்றனர். சீதா சாப்பிட சாப்பாடு வைக்காமல் குப்பை தொட்டியில் கொட்டி விடுகின்றனர். இதனால் சீதா பசியில் துடிக்க ராம் போன் செய்யும் போது உண்மையை மறைத்து விடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
Telangana Election 2023: தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு... ஆட்சி அமைக்கப்போவது யார்?