Saranya Ponvannan: இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் ரொம்ப ஃபீல் பண்றேன் - சரண்யா பொன்வண்ணன் வருத்தம்!
Saranya Ponvannan : கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு ஆறு பெண் குழந்தைகளை பெத்துக்கணும் என பிளான் போட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
இன்றைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மட்டுமின்றி பேவரைட்டான ஒரு அம்மாவாக வலம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவரின் இயல்பான நடிப்பிற்காகவே ஏரளமான ரசிகர்களை பெற்றவர். ஒரு அம்மா என்றால் பாசமாக இருப்பார் என்பதையும் தாண்டி குறும்புத்தனம் கலந்த ஒரு செண்டிமெண்ட் அம்மாவாக தன்னுடைய நடிப்பால் எங்க அம்மா இப்படி இருந்தா நல்லா இருக்குமே என எங்க வைப்பவர். சமீபத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் ஸ்வாரஸ்யமாக பேசி இருந்தார்.
கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு ஆறு பெண் குழந்தைகளை பெத்துக்கணும் என பிளான் போட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணம் நடந்ததுக்கு பிறகு இத நான் என்னோட கணவர் கிட்ட சொன்னதும் அவர் என்ன பார்த்து சிரிச்சார். எங்க எம்மா உயிரோட இருக்கும் போது அடிக்கடி சொல்லுவாங்க. நீ நிறைய பொம்பள பிள்ளைங்கள பெத்துக்கணும். அது எல்லாம் எனக்கு அப்படியே கற்பனை பண்ணி பண்ணி ரொம்ப ஆசையா அதுவே என்னோட தலையில ஏறிப்போச்சு. எங்க அம்மா மட்டும் உயிரோட இருந்து இருந்தாங்கனா நிச்சயம் நான் ஆறு பொண்ணு பெத்துக்கிட்டு இருப்பேன். எனக்கு வளர்க்க ஹெல்ப் பண்ண அக்கா தங்கச்சி அம்மா என ஆட்கள் இல்லை. அதனால இரண்டு பொண்ணோட நிறுத்திக்கிட்டேன். ஆனா பெண் குழந்தைகள்னாலே எனக்கு பைத்தியம்.
'அலை' படத்தில் தான் முதலில் அம்மாவாக நடிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் ஆம்பள பசங்களுக்கு மட்டும் தான் அம்மாவா நடிச்சேன். சிம்பு, ஜீவா, பரத், தனுஷ், விஜய் சேதுபதி, சசிகுமார், உதயநிதி என இப்படி அடுத்தடுத்து ஆம்பள பசங்களுக்கே அம்மாவா நடிக்கவும் இவ்வளவு நல்ல பசங்களா இருக்காங்களே. இந்த மாதிரி நமக்கு ஒரு ஆம்பள பையன் இல்லையே என ரொம்ப வருத்தமா போய் அதுவே பெரிய ஏக்கமா மாறிப்போச்சு. நம்ம ஒரு ஆம்பள பிள்ளையை பெத்து இருக்கலாம், ரொம்ப மிஸ் பண்ணிட்டோமே என அடிக்கடி நினச்சு வருத்தப்படுவேன்.
சினிமாவுல இருக்க அம்மா போல தான் நிஜத்திலும் இருப்பேன். லைப்பை ரொம்ப லைட்டா எடுத்துக்குற ஆள் நான். பசங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால அவங்க என்ன சொன்னாலும் ஒகே சொல்லற அம்மா தான். ஆனா ஒழுக்கம் விஷயத்தில மட்டும் கொஞ்சம் அதிகமாவே ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். படிக்கறது, ஒழுங்கா காலேஜ் போறது, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்குறது, மத்தவங்க கிட்ட பழகுற விதம் இது எல்லா விஷயத்திலும் நான் ரொம்ப ஒழுக்கம் பார்ப்பேன். அத தவிர மத்த விஷயத்துல ஜாலியா இருக்குறது, அவங்களுக்கு சுதந்திரம் கொடுக்குறது அது எல்லாமே தாராளமா கொடுப்பேன். கிட்டத்தட்ட சினிமாவில் இருக்குற அதே ஜால்ரா அம்மாவா தான் நிஜத்திலும் இருக்கிறேன் என்றார் சரண்யா பொன்வண்ணன்.