மேலும் அறிய

Kantara 2: இன்னும் 20 நாட்களே ஷூட்டிங்.. கோடை விடுமுறையில் களமிறங்கும் காந்தாரா 2

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வரும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

காந்தாரா

கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் தொடர்ந்து இந்தி மற்றும் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெறும் ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் மொத்தம் 400 கோடி ரூபாய் வசூல் சேர்த்தது. மேலும் அதிக வருவாய் ஈட்டிய கன்னட மொழித் திரைப்படங்களில் கேஜிஎஃப் திரைப்படத்திற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது காந்தாரா. இந்தப் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழாவில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவித்தார். 

காந்தாரா 2

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. முதல் பாகத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியை தொடும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் செட் அமைக்காமல் நிஜ லொகேஷன்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே நேரம் படத்தில் நிறைய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் இந்த காட்சிகளை உலகதரத்தில் படக்குழு உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. 

காந்தாரா படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை பலமடங்கு அதிகரித்தது. ஆனால் காந்தாரா 2 படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட பலமடங்கு பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று கூறப் படுகிறது. 

மேலும் படிக்க : Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!

Rajinikanth: ரஜினி தாத்தா! அடம்பிடித்த பேரனை வகுப்பறை வரை அழைத்துச் சென்ற சூப்பர்ஸ்டார்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து  ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Embed widget