கேள்வி கேட்கும் லட்சணத்தை பாருங்க...ஆங்கரிடம் ஆடையைப் பற்றி தகாத கேள்வி...ரொபோ சங்கர் பட நிகழ்ச்சியில் சர்ச்சை
அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் தகாத முறையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அம்பி பட பத்திரிகையாளர் சந்திப்பு
ரோபோ சங்கர் நாயகனாக நடித்துள்ள படம் அம்பி. இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கஞ்சா கருப்பு , இமான் அண்ணாச்சி , ரமேஷ் கண்ணா மோகன் வைத்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டி மீடியா சார்பாக எஃப் பிரசாந்தி பிரான்சிஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். அம்பி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை ஐஸ்வர்யா ரகுபதி தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் ஆடை குறித்து தகாத முறையில் கேள்வி கேட்டது சினிமா வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆடை பற்றிய கேள்வியால் சர்ச்சை
இந்த நிகழ்வில் பேசிய ரோபோ சங்கர் தான் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி பத்திரிகையாளரளை நிறைய தண்ணீர் குடிக்கும்படி ஆலோசனை கூறினார். அப்பொது பத்திரிகையாளர் ஒருவர் வெயிலுக்கு நிறைய தண்ணீர் குடிக்க எங்களிடம் சொன்னீர்கள் அதே மாதிரி நீங்கள் அணிந்திருக்கும் உடையும் வெயிலுக்கான ஒரு உடை என்று நான் நினைக்கிறேன். அப்படிதானா " என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா 'நம்ம இங்க என்ன டாபிக் பேசிட்டு இருக்கோம். என் உடையைப் பற்றிய கேள்வி இங்கு சம்பந்தமில்லாதது ' என பதிலளித்தார். இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரில " என அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பத்திரிகையாளரை பலர் விமர்சித்து வருகிறார்கள்.
மீடியாவெல்லாம் ஏன்டா இவ்ளோ எச்சைங்களா இருக்கீங்க?🤬 pic.twitter.com/cNDNXN8LhO
— முகில் (@mukil1123) May 7, 2025






















