Inflammation-அதிகரிக்காமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

Published by: ஜான்சி ராணி

நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் வீக்கம் இன்ஃபிளமேசஷன் எனப்படுகிறது

உடல் நலக்கோளாறு ஏற்படுகையில், உடலின் healing ரெஸ்பான்ஸ் Inflammation என்று சொல்லலாம். குணமாகும் நிலைக்கு inflammation மிகவும் முக்கியமானது.

inflammation அதிகமாக இருந்தால் அது பிரச்சனைக்குரியது என்கின்றனர் மருத்துவர்கள்.

UK Biobank-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், inflammation சமநிலையை நிர்வகிக்க சில உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் என்று கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் தேவையான அளவு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோட்டீன் உணவுக்காக இறைச்சி சாப்பிடுபவர் என்றால் நிறைய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். புரோட்டீன் மட்டும் சாப்பிட்டுவிட்டு, நார்ச்சத்து தவிர்ப்பது சரியானது அல்ல.

தாவர வகை உணவுகளை சாப்பிடுவர்களும் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து தேவையான அளவு உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நார்ச்சத்து குறைவாகவோ அல்லது அதை தவிர்ப்பதோ குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது ஆய்வு.

இதோடு, inflammation சமநிலையை நிர்வகிக்க தினமும் உடற்பயிற்சி, மன அழுத்தத்தை தவிர்க்க பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.