மேலும் அறிய

TTV Dhinakaran: யாராது கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்னால் ஏமாறாதீங்க.. டிடிவி தினகரன் அட்வைஸ்!

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் தினம் ஒரு மாற்றத்தைச்

யாராவது கட்சிஆரம்பிப்பதாக சொன்னால் ஏமாறாதீர்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “அம்மா, அம்மா என்றவர்கள், அம்மா தான் தெய்வம் என்றவர்கள், அம்மாவின் ஆட்சி வேண்டும், அம்மாவின் கட்சியின் நாங்கள் ஒன்றுகூடுவோம் என சொன்னவர்கள் எல்லாரும் திமுகவின் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு வருவது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு கட்சி தொடங்கி அதனை பதிவு செய்யவே குறைந்தப்பட்சம் 6 மாதங்களாகும். அடிப்படையில் அக்கட்சியில் குறைந்தது 100 பேராவது உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

என்னதான் சம்பந்தப்பட்டவர்கள் அவசரப்படுத்தினாலும் 3 மாதங்களில் அது நடக்காத காரியம். எனவே யாராவது கட்சிஆரம்பிப்பதாக சொன்னால் ஏமாறாதீர்கள். திடீர் இட்லி, திடீர் சாம்பார் மாதிரி திடீர்னு கட்சி தொடங்குவோம். வேட்பாளர்களை அறிவிப்போம் என சொல்கிறார்கள்.

திமுக அதிமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களை எல்லாம் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். அந்த தனி நபர்கள் அங்கு போய் சேர்வதால் அவர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி வருவதை இங்கு தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் மிகப்பெரிய அளவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் மாற்றுக்கட்சியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் அணியி இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார். அவர் என்ன மாதிரியான முடிவெடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தனது 88 வயதில் எம்ஜிஆர்-அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதனையெல்லாம் தான் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

இப்படியான நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக, தமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இருந்த நிலையில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தேமுதிகவும் திமுக கூட்டணிக்குள் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் நாளை மழை எச்சரிக்கை! எந்தெந்த பகுதிகளில்? முழு விபரம் இதோ!
சென்னையில் நாளை மழை எச்சரிக்கை! எந்தெந்த பகுதிகளில்? முழு விபரம் இதோ!
இது வேற லெவல் டெக்னாலஜி: இனி தாகம் எடுத்தா காத்தை பிடிங்க! ஆரோவில்லில் கலக்கும் அட்மாஸ்பாக்ஸ்!
இது வேற லெவல் டெக்னாலஜி: இனி தாகம் எடுத்தா காத்தை பிடிங்க! ஆரோவில்லில் கலக்கும் அட்மாஸ்பாக்ஸ்!
திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!
திருவாடானையில் சைவ, சமண, பௌத்த தடங்கள்.. ராமநாதபுரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு, மரபு நடை தரும் தகவல்!
ஸ்கிரிப்ட் போடும் போலீஸ்.. சித்திரவதை செய்ததா? – கைதி ஆகாஷ் மரணத்தால் பதற்றம் - அன்புமணி கண்டனம்!
ஸ்கிரிப்ட் போடும் போலீஸ்.. சித்திரவதை செய்ததா? – கைதி ஆகாஷ் மரணத்தால் பதற்றம் - அன்புமணி கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
Kia Offers: ரூபாய் 1 லட்சம் ஆஃபர்.. மார்ச் மாசம் மாஸ் தள்ளுபடி அறிவித்த கியா - இந்த கார்களுக்கா?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Scorpio N Vs Harrier EMI Plan: ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்
Embed widget