பகவத்கீதை, பைபிள், குர்ஆனை சொல்கிறது கண்ணதாசன் பாடல் - வாலி சொன்னது எந்த பாடலை?
கண்ணதாசனின் பாடலில் பகவத்கீதை, குரான் மற்றும் பைபிளின் சிறப்பம்சங்கள் உள்ளது என்று வாலி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் மறைந்த கவிஞர் வாலி, ஒரு முறை நேர்காணலில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
கண்ணதாசன் பாடல்:
நீங்க யோசனை பண்ணிப் பாருங்க. நம்மள மாதிரி வாழ்க்கையில ஒன்னும் வெற்றி அடையாம, எதிலயும் வெற்றி பெறாம, மனம் ரொம்ப தொய்ந்து நைந்து போய் இருக்கிற ஒரு ஆள் அப்படினு வச்சுக்கோங்க.
நீங்க கேக்குறீங்க மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? ஆமா ஐயான்னு சொல்றீங்க. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். கண்ணதாசன் பாடலை ஒரு பாட்டு எழுதினால் எப்படி எழுத வேண்டும் என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மயக்கமா? குழப்பமா?
மயக்கமா, குழப்பமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமானா என்று கேட்டவுடன் நபங்கள் ஆமா என்கிறீர்கள். அந்த லிங்க் வருகிறது பாருங்கள். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும். அப்புறம் எப்படியா வாழ்றது வாசல்தோறும் வேதனை இருந்தால்?
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. நீ எப்படி வாழ்றதுனு வாடி நின்றால் அது உன்னை விட்டுவிட்டுப் போவதில்லை. அப்போ, எப்படி பின்ன மீண்டு வருவது? எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்.
பகவத்கீதை, பைபிள், குர்ஆன்:
என்னய்யா நொந்து கிடக்குறேன். எப்படியா எதையும் தாங்கும் இதயம் இருக்கும்? ஏழை மனதை மாளிகையாக்கு இரவும் பகலும் காவியம் பாடுனார். காவியம் பாடிகிட்டு இருக்கலாம். ஆனால், பசிக்குதே ஐயா. நாளைக்கு என்ன பண்றதுன்னா? நாளை பொழுதை இறைவனுக்கு கழித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு என்றார்.
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து எப்போ பொழுது விடியுறது? எங்கே நிம்மதி தேட்றது? அப்படின்னா உன்னை விட மோசமா எவ்ளோ பேரு இருக்கான். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதினார். இது ஒரு அற்புதமான பாட்டுல்ல. இது ஒரு பைபிள், ஒரு பகவத்கீதை, ஒரு குர்ஆன் எல்லாவற்றின் சிறப்பம்சமும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியிருப்பார்.
1962ம் ஆண்டு வெளியான ஜெமினிகணேசனின் சுமைதாங்கி படத்தில் கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா பாடல் இன்றளவும் மிகவும் பிரபலம் ஆகும். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உத்வேகம் தரும் யதார்த்தமான பாடலாக இந்த பாடல் உள்ளது.























